மாறும் தீ விபத்துகள்: மாறாத தீயணைப்புத் துறை
தமிழகத்தில் தீ விபத்துகளின் தன்மை மாறிக் கொண்டிருக்கும் வேளையில், தீயணைப்புத்துறை நவீனமயமாக்கப்படாததால்


தமிழகத்தில் தீ விபத்துகளின் தன்மை மாறிக் கொண்டிருக்கும் வேளையில், தீயணைப்புத்துறை நவீனமயமாக்கப்படாததால் அத்துறை தடுமாறி வருகிறது.
தமிழக தீயணைப்புத்துறையின் கீழ் 308 தீயணைப்பு நிலையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் 300 அதிகாரிகள் உள்ட 6,700 பேர் பணிபுரிகின்றனர். தீயணைப்புத்துறைக்கு கடந்த ஆண்டு மொத்தம் சுமார் 31 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன. இதேபோல மாநிலம் முழுவதும் 32,273 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 31,414 தீ விபத்துகள் சிறிய அளவிலான விபத்துகளாகும். இந்த விபத்துகளில் 87 பேர் இறந்துள்ளனர், 3,659 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். விபத்துகளில் ரூ. 27.02 கோடி மதிப்புள்ள சொத்துகள் சேதமடைந்துள்ளன. ரூ.337.99 கோடி மதிப்புள்ள சொத்துகள் விபத்துகளில் இருந்து சேதமில்லாமல் மீட்கப்பட்டுள்ளன.
ஆண்டுக்கு சராசரியாக 30 சதவிகிதம் தீ விபத்துகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் தீ விபத்துகளும், அதனால் ஏற்படும் சேதங்களும் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்புத்துறையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியில் பெரியளவில் நவீனமயமாக்கலும், மாற்றங்களும் செய்யப்படாமல் உள்ளன.
பத்து ஆண்டுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்துகளுக்கும், இப்போது ஏற்படும் தீ விபத்துகளுக்கும் வேறுபாடுகள் அதிகம் உள்ளன.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தீயை கவனக்குறைவாக கையாளும்போது குடிசை, வீடுகள், கிடங்குகள், கடைகள் ஆகியவற்றிலே அதிகமாக தீ விபத்துகள் ஏற்பட்டன. ஆனால் இப்போது மின்கசிவு, கேஸ் கசிவு, வேதிப் பொருள்கள், வெடிபொருள்கள் ஆகியவற்றினால் ஏற்படும் தீ விபத்துகளே அதிகமாக நடைபெறுகின்றன என்கிறார் தீயணைப்புத்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி.
மேலும் இந்த வகை தீ விபத்துகளே, மொத்த தீ விபத்தில் 80 சதவிகிதம் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார். இதில் 50 சதவிகித தீ விபத்துகள் மின்கசிவின் காரணமாக ஏற்படுகிறது.
படிப்படியாக இந்த தீ விபத்துகள் அதிகரித்துள்ள நிலையில், இவற்றை அணைப்பதற்குரிய எந்த நவீன கருவிகளும் இல்லாமல் பெரும்பாலான தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. எந்த தீ விபத்தானாலும் தண்ணீரை பீய்ச்சி அடிப்பதற்குரிய வசதியை மட்டுமே அனைத்து தீயணைப்பு நிலையங்களும் பெற்றுள்ளன
பெருநகரங்களில் மட்டுமே சில தீயணைப்பு நிலைங்களில் அதிநவீன கருவிகள் உள்ளன. ஊரகப் பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் அதுவும் கிடையாது.
இதன் விளைவாக தீ விபத்துகளினால் பல கோடி சொத்துகள் அழிவதோடு, விலை மதிப்பில்லா மனித உயிர்கள் பறிபோவதை தடுக்க முடியாத நிலையில் உள்ளதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதோடுமட்டுமன்றி நவீனமயமாக்கல் இல்லாததால் தீயணைப்பு வீரர்களும் அவ்வபோது உயிர் இழக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. மேலும் பல்வேறு இடர்பாடுகள், சிரமங்களுக்கு இடையே உயிரை துச்சமாக மதித்து வேலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அத்துறையைச் சேர்ந்த ஒரு ஊழியர் கூறுகிறார்.
வேதிப் பொருள்களால் ஏற்படும் தீயை அணைப்பதற்குரிய சிறப்பு பயிற்சிகள் கூட தீயணைப்பு படை வீரர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. இதனால் தீயை அணைக்க செல்லும் வீரர்கள், சிறிது கவனக்குறைவாக செயல்பட்டாலும் உயிரை இழக்கும் அபாயம் உள்ளதாக தீயணைப்பு படை வீரர்கள் தெரிவிக்கின்றனர். போதிய பாதுகாப்பு கவசங்கள் இல்லாமலும், நவீன கருவிகள் இல்லாமல் வேதி பொருள்கள் மற்றும் கேஸ் கசிவு ஆகியவற்றால் தீயை அணைக்கச் செல்வதால் நுரையீரல் பாதிப்பு, தேமல், மூச்சு திணறல் உள்ளிட்ட சில நோய்களின் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
எனவே பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்களின் நலன் கருதி அரசு தீயணைப்புத்துறை நவீனப்படுத்தி, அதற்குரிய பயிற்சியை அத்துறை வீரர்களுக்கு வழங்க வேண்டும் என சமுதாய ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அதிகரிக்கும் தீ விபத்துகள்
ஆண்டுமொத்த விபத்துகள்சிறிய விபத்துகள்இறப்புகாப்பாற்றப்பட்டோர்இழப்புமீட்கப்பட்டது
20123227331414873659ரூ.27.02 கோடிரூ.337.99 கோடி
20112221921494843768ரூ.27.59 கோடிரூ.374.68 கோடி
20101831117642755203ரூ.24.60 கோடிரூ.335.24 கோடி
200921840208781273875ரூ.29.51 கோடிரூ.255.93 கோடி
200817433164446916088ரூ.53.17 கோடிரூ.446.56 கோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...