தமிழகம் முழுவதும் 10, 12- ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் ஆள்மாறாட்டத்தைத் தடுக்கும் வகையில் புகைப்படம், பார்கோடுடன் கூடிய விடைத்தாள் முறை 2014 மார்ச் முதல் அறிமுகமாகிறது.
கடந்த காலங்களில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சில பாடப்பிரிவுகளுக்கு மட்டும் டம்மி எண் (ஈன்ம்ம்ஹ் சன்ம்க்ஷங்ழ்) முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது.
எனினும், தேர்வுகளில் பல இடங்களில் ஆள் மாறாட்டம், விடைத்தாள்கள் காணாமல்போவது, சேசிங் முறையில் திருத்தும் முகாமைக் கண்டறிந்து மதிப்பெண்கள் பெறுவது உள்ளிட்ட குற்றங்கள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் தமிழக கல்வித்துறை புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்களில், தேர்வு எழுதும் முறையை 2014-ம் ஆண்டில் அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அரசு முதன்மைச் செயலர் சபிதா வெளியிட்டுள்ள ஆணை விவரம்:
இப்போது பொதுத்தேர்வுகளில் வழங்கப்பட்டு வரும் விடைத்தாள்களில் மாற்று எண் வழங்கும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த முறையால் விடைத்தாள் திருத்தும் பணியில் தாமதம் நிலவி வந்தது.
இந்த முறையை மாற்ற, தேசிய தகவலியல் மையம் மற்றும் அரசுத் தகவல் தொகுப்பு விவர மைய அதிகாரிகளுடன் கல்வித்துறை ஆலோசித்து புதிய முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, இப்போது விடைத்தாளில் பயன்படுத்தப்பட்டு வரும் டம்மி எண்ணுக்குப் பதிலாக பார்கோடு முறை (ஆஹழ் இர்க்ங்) அமல் செய்யப்படுகிறது.
இதில் தேர்வு எழுதுபவரின் பெயர், தேர்வு மையம், தேர்வு நாள், தேர்வு எழுதும் பாடம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.
மேலும் விடைத்தாள்களில் தேர்வர்களின் புகைப்படமும் இடம்பெறும். இவையனைத்தும் கொண்ட தாள் "டாப் ஷீட்' (பர்ல் நட்ங்ங்ற்) எனப்படும்.
ஒவ்வொரு நாள் தேர்விலும் ஒவ்வொரு டாப் ஷீட் இடம் பெற்றிருக்கும். டம்மி எண்ணைப் பயன்படுத்தும்போது மதிப்பெண்களைப் பதிவு செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்ட நிலையில், புதிய டாப் ஷீட் முறையால் விடைத்தாள்களை தாமதமின்றி திருத்தி மதிப்பெண்களைப் பதிவு செய்ய முடியும்.
மேலும் மதிப்பெண் சான்றிதழ்களையும் விரைந்து அச்சடிக்கவும் முடியும்.
இதனிடையே, இப்போதுள்ள முதன்மை விடைத்தாளின் பக்கங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி 12-ம் வகுப்புத் தேர்வுகளில் வழங்கப்படும் முதன்மை விடைத்தாளில் பக்கங்களின் எண்ணிக்கை 16-லிருந்து 40 ஆக உயர்த்தப்படும்.
10-ம் வகுப்புத் தேர்வில் வழங்கப்படும் முதன்மை விடைத்தாளில் பக்கங்களின் எண்ணிக்கை 8-லிருந்து 32 ஆக உயர்த்தப்படும்.
இவையனைத்தும் மார்ச் - ஏப்ரல் 2014 தேர்வு முதல் அமல் செய்யப்படும்.
முதன்மை விடைத்தாளில் பக்கங்களின் எண்ணிக்கை உயர்த்தப்படுவதால் அந்தப் பக்கங்களுக்குள்ளேயே தேர்வர்கள் விடைகளை எழுதிவிட முடியும். அதனால் கூடுதல் விடைத்தாள்களை வாங்கி நூல் கொண்டு கட்ட வேண்டிய அவசியம் ஏற்படாது.
இதனால் விடைத்தாள்கள் காணாமல்போவதும் தவிர்க்கப்படும். மேலும் அறைக் கண்காணிப்பாளர்கள், கூடுதல் விடைத்தாள்களை வழங்க வேண்டிய நிலை இல்லாததால், அவர்கள் கண்காணிப்புப் பணியில் முழுமையாக ஈடுபட முடியும். இதனால் தேர்வு அறைக் குற்றங்கள் தவிர்க்கப்படும்.
ஏற்கெனவே இருப்பில் உள்ள பழைய முதன்மை மற்றும் கூடுதல் விடைத்தாள்களை 10, 12 -ம் வகுப்பு அரையாண்டு, இறுதித் திருப்புதல் தேர்வுகளில் பயன்படுத்திக் கொள்ளலாம் என கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

காஞ்சிபுரம் அருகே மே.1 இல் நடவாவிக் கிணறு உற்சவம்: கிணற்றை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்!

நகப் பூச்சு தயாரிப்பு ஆலையில் தீ விபத்து
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

