நாமக்கல், செப்.9: காகிதக் கூழ், கிழங்கு மாவைக் கொண்டு தயாரிக்கப்படும் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளுடன் ஒப்பிடுகையில் களிமண்ணால் வடிவமைக்கப்படும் சிலைகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. இதனால், நாமக்கல் பகுதி மண்பாண்ட கலைஞர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியையொட்டி நாடு முழுவதும் ஓரடி முதல் 15 அடிக்கு அதிகமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, இந்த மாதம் 19-ம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்திக்காக நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு உள்ளிட்ட பல பகுதிகளில் வெளிமாவட்ட தொழிலாளர்கள் முகாமிட்டு ஒரு மாதத்துக்கு மேலாக விநாயகர் சிலைகள் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
காகிதக் கூழ், கிழங்கு மாவைக் கொண்டு அவர்கள் தயாரிக்கும் சிலைகள் பல்வேறு வடிவங்களிலும், பல வண்ணங்களிலும் இருப்பதால் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெறுகின்றன. இதனால், அந்தச் சிலைகள் ரூ.50 ஆயிரம் வரைகூட விலை போகின்றன.
அதேசமயம், சுற்றுச்சூழலுக்கு எந்தவிதத்திலும் தீங்கு ஏற்படுத்தாத களிமண் விநாயகர் சிலைகளுக்கு மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்காததால் பல நாள்கள் கஷ்டப்பட்டு தயாரிக்கப்படும் அந்தச் சிலைகளுக்கு தகுந்த விலையும் கிடைப்பதில்லை.
இதனால், களிமண் சிலைகள் தயாரித்து வைத்துள்ள மண்பாண்ட கலைஞர்கள் பலரும் கவலையில் உள்ளனர்.
நாமக்கல் குட்டைமேல் தெருவில் மண்டபாண்ட தொழிலில் ஈடுபட்டுள்ள 5 குடும்பங்கள் ஆண்டுதோறும் விநாயகர் சிலைகள் தயாரிப்பது வழக்கம். நிகழாண்டு விநாயகர் சதுர்த்திக்காக கடந்த ஒரு மாதமாக விநாயகர் சிலைகள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மிகநேர்த்தியுடன், கலை நுணுக்கங்களுடன் தயாரித்து வைத்துள்ள அந்தச் சிலைகள் ரூ.50 முதல் ரூ.120 வரை மட்டுமே விலை போவதாக மண்பாண்ட கலைஞர் சின்னத்தம்பி (70) தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியது:
விநாயகர் சதுர்த்திக்காக ரூ.3,000 செலவில் ஏளூரிலிருந்து களிமண் எடுத்து வரப்பட்டு விநாயகர் சிலைகள் தயாரித்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை ஒரு சிலையும் விற்பனையாகவில்லை. இதனால், விழா நெருங்கும் நாள்களில் வேறு வழியின்றி குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
பல நாள்கள் கஷ்டப்பட்டு தயாரிக்கும் சிலைகளுக்கு குறைந்த விலையே கிடைப்பதால் மண்பாண்ட கலைஞர்கள் பலரும் சிலை தயாரிப்புப் பணிகளை கைவிட்டுள்ளனர். பலர் அச்சு விநாயகர் சிலைகளைத் தயாரிக்க தொடங்கிவிட்டனர் என்றார் அவர்.
நாகரீக மாற்றத்தால் மண்பாண்டத் தொழில் மதிப்பிழந்து வருவதை அடுத்து அந்தக் குடும்பங்களிலேயே இளைஞர்கள் யாரும் களிமண் சிலைகள் செய்யும் பணியில் ஈடுபடுவதில்லை. இதனால், அழிந்து வரும் மண்பாண்ட சிற்பக் கலையைப் பாதுகாக்கவும், தள்ளாத வயதிலும் சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கலைஞர்களுக்கு உதவும் களிமண் சிலைகளுக்கு உரிய விலை கிடைக்க மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதே அந்தக் குடும்பங்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு!
நானும் திராவிடன்தான்! சென்னையில் சந்திரபாபு நாயுடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


