திருத்தணி ரயில் நிலையத்தில், உட்காருவதற்கு போதுமான நாற்காலிகள், குடிப்பதற்கு ஏற்ற சுத்தமான குடிநீர், சுகாதாரமின்மை போன்ற அடிப்படை வசதியின்றி, பயணிகள் தினமும் அவதிப்படுகின்றனர்.
திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு மற்றும் ஆர்.கே.பேட்டை ஆகிய நான்கு ஒன்றியங்களில் உள்ள 400-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, தினமும் 25 முதல் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் வியாபாரிகள், திருத்தணி ரயில் நிலையத்துக்கு வருகின்றனர்.
இவர்கள் இங்கிருந்து, எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்கள் மூலம், சென்னை சென்ட்ரல், திருவள்ளூர், திருப்பதி, காஞ்சிபுரம் ஆகிய இடங்களுக்கு, தினசரி சென்று வருகின்றனர்.
திருத்தணி ரயில் நிலையத்தில் மூன்று பிளாட்பாரங்கள் உள்ளன. இந்த பிளாட்பாரங்களில் பயணிகள் உட்காருவதற்கு போதுமான நாற்காலிகள் இதுவரை அமைக்கப்படவில்லை.
அதே போல், பிளாட்பாரங்களில் இருக்கும் குடிநீர் குழாய்களில் ஒரு சில குடிநீர் குழாய் தவிர மற்ற குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. மேலும் பிளாட்பாரங்களில் போதிய மின்விளக்குகள், மின்விசிறிகள் இல்லை.
ரயில் பயணிகளுக்காக கட்டப்பட்டுள்ள கழிப்பிடத்தில் வெளியேறும் கழிவுநீரால் தூர்நாற்றம் வீசுகிறது. மேலும் போதிய தண்ணீர் வசதியில்லாததால், பயணிகள் இதைப் பயன்படுவதற்கு தயங்குகின்றனர்.
கூடுதல் டிக்கெட் கவுன்ட்டர்கள் திறக்கப்படுமா? திருத்தணி ரயில் நிலையத்தில் இரண்டு டிக்கெட் கவுன்ட்டர்கள் மட்டுமே செயல்படுகின்றன. இந்த கவுன்ட்டர்களிலேயே பயணிகள் டிக்கெட் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட்டும் வழங்கப்படுகின்றன.
அதிகாலை 5 மணி முதல் சென்னை சென்ட்ரல் வரை செல்லும் மின்சார ரயிலில் பயணம் செய்ய, அதிகளவில் பயணிகள் டிக்கெட் வாங்குவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
ஆனால், சரியான நேரத்தில் பயணிகள் டிக்கெட் வாங்க முடியாமல் ரயிலை தவற விடுகின்றனர். மேலும் 3-வது டிக்கெட் கவுன்ட்டர் எப்போதும் மூடியேக் கிடக்கிறது.
சமூக விரோதிகளின் கூடாரமாகும் ரயில்வே பூங்கா: திருத்தணி ரயில் நிலை வளாகத்தில் இருக்கும் பூங்காவில் பல லட்சம் செலவில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டு பூச்செடிகள், வண்ண விளக்குகள் வைத்து புதுப்பிக்கப்பட்டது.
பின்னர் நாள்கள் செல்ல செல்ல பூங்கா பராமரிப்பு இல்லாமல் தற்போது குடிமகன்களின் கூடாரமாகவும், சமூக விரோதச் செயல்கள் நடந்தேரி வருவதாகும் ரயில் பயணிகள் புகார் கூறுகின்றனர்.
எனவே திருத்தணி ரயில் நிலையத்தில் கூடுதல் கவுன்ட்டர், குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்துத் தர ரயில்வே உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!

4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்! மீண்டும் கோளாறு - காங்கிரஸ் புகார்!

பிரதமர் மோடியின் இரட்டைத் தோல்வி! எரிவாயு உற்பத்தி சரிவு, உரங்கள் தட்டுப்பாடு: கார்கே
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


