டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ரூ.100 கோடி மதிப்பிலான பள்ளிச் சீருடைகள் தேக்கம்

ஈரோடு: பள்ளி மாணவ, மாணவிகளின் சீருடை நிறம் மாற்றப்படுவதாக அரசு அறிவித்துள்ளதால் தமிழகத்தில் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான பள்ளிச் சீருடைகள் விற்பனை செய்ய முடியாமல் தேக்கம் அடைந்துள்ளன.  அரசின் அறிவிப்

News image
Updated On :2 ஜனவரி 2024, 5:04 pm

ஜெபலின்ஜான்

ஈரோடு: பள்ளி மாணவ, மாணவிகளின் சீருடை நிறம் மாற்றப்படுவதாக அரசு அறிவித்துள்ளதால் தமிழகத்தில் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான பள்ளிச் சீருடைகள் விற்பனை செய்ய முடியாமல் தேக்கம் அடைந்துள்ளன.

 அரசின் அறிவிப்பால் உற்பத்தி செய்த சீருடைகளை என்ன செய்வது என்று தெரியாமல் ஜவுளி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

 தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகளை அரசு வழங்கி வருகிறது. மாணவர்களுக்கு 2 செட் காக்கி நிற அரைக்கால் சட்டையும், வெள்ளைச் சட்டையும் வழங்கப்பட்டு வந்தது. மாணவிகளுக்கு 2 செட் இளம் நீல நிற பாவாடையும், வெள்ளை சட்டையும் வழங்கப்பட்டன. பச்சை, நீலம், காக்கி என்று ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு நிறம் என்ற அடிப்படையில் மாணவ, மாணவிகள் சீருடைகள் அணிந்து வந்தனர்.

 இந்நிலையில், மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒரே மாதிரியான சீருடை இருக்கும் வகையில் புதிய சீருடை நிறத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

 அதன்படி, 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மெரூன் நிறத்தில் அரைக்கால் சட்டையும், இளம் பிரவுன் நிறத்தில் மேல் சட்டையும் வழங்கப்படுகிறது. மாணவிகளுக்கு மெரூன் நிறத்தில் பாவாடையும், இளம் பிரவுன் நிறத்தில் மேல் சட்டையும் வழங்கப்படும். 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மெரூன் நிற முழுக்கால் சட்டை, இளம் பிரவுன் நிற மேல் சட்டையும், மாணவிகளுக்கு மெரூன் நிற சுடிதார் மற்றும் இளம் பிரவுன் நிற துப்பட்டாவும் வழங்கப்படுகிறது.

 மேல் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளும் இதே நிறத்தில் சீருடை அணிய வேண்டும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆண்டு ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் தலா 4 செட் சீருடைகள் இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

 சீருடைகள் தேக்கம்: 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்குதான் சீருடைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. பிற மாணவர்களுக்கு ஒவ்வொரு பள்ளியிலும் நீலம், பச்சை, வண்ணக் கட்டங்கள் என பல்வேறு வண்ணத்தில் சீருடைகள் இருந்ததால் தமிழகத்தில் ஈரோடு, கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிச் சீருடைகளை ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்து வந்தனர்.

 இவை மாநிலம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டாலும், ஈரோடு ஜவுளிச்சந்தை மூலம் விற்பனை செய்யப்படுவது வழக்கம். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சிறு வியாபாரிகள் இவற்றை வாங்கிச் சென்று தங்களது மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் விற்பனை செய்து வந்தனர்.

 ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 5-ம் தேதி முதல் ஜூன் 15-ம் தேதி வரை ஈரோடு ஜவுளிச்சந்தையில் பள்ளி மாணவர்களின் சீருடைகள் விற்பனை களைகட்டும். ஆனால், இந்த ஆண்டு தமிழக அரசு சீருடை நிறத்தை மாற்றிவிட்டதால் தமிழகம் முழுவதும் ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட சீருடைகள் தேங்கிவிட்டன.

 இது குறித்து ஈரோடு ஜவுளி உற்பத்தியாளர் ஜி.தண்டபாணி கூறியது:

 பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் சீருடைகளை ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி முதல் மார்ச் மாதத்துக்குள் உற்பத்தி செய்துவிடுவோம். பின்னர் ஈரோடு ஜவுளிச்சந்தை மூலம் விற்பனை செய்வோம். இந்த ஆண்டு பள்ளிச் சீருடை நிறத்தை மாற்றிவிட்டதால் உற்பத்தி செய்யப்பட்ட சீருடைகளை வாங்க வெளிமாவட்ட வியாபாரிகள் வரவில்லை. நாங்கள் ஏற்கெனவே வங்கிகள் மற்றும் தனியாரிடம் கடன் பெற்று இவற்றை உற்பத்தி செய்துள்ளோம். அரசு திடீரென நிறத்தை மாற்றியதால் எங்களது தொழில் முடங்கியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் ரூ.30 கோடிக்கு பள்ளிச்சீருடைகள் முடங்கியுள்ளன. எனவே, அரசு இந்த ஆண்டு பழைய சீருடை நிறத்தையே பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 இது குறித்து ஈரோடு ஜவுளிச் சந்தையில் உள்ள கனி மார்க்கெட் தினசரி வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.என்.நூர்சேட் கூறியது:

 அரசின் திடீர் அறிவிப்பால் தமிழகம் முழுவதும் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான பள்ளிச் சீருடைகள் தேக்கம் அடைந்துள்ளன. ஜனவரி மாதத்தில் இதே அறிவிப்பை வெளியிட்டிருந்தால் சீரூடைகளை உற்பத்தி செய்யாமல் நிறுத்தியிருப்போம். எனவே, ஜவுளி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் நலன் கருதி இந்த ஆண்டு பழைய சீருடையை பயன்படுத்த முழுமையான தடை விதிக்கக் கூடாது.

 பழைய, புதிய சீருடைகளை கலந்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கலாம். அடுத்தக் கல்வி ஆண்டு முதல் புதிய சீருடைகளை முழுமையாக அமல்படுத்தலாம். இது குறித்து முதல்வர், கல்வி அமைச்சர் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளோம். நல்ல முடிவை முதல்வர் அறிவிப்பார் என நம்புகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.