திருத்தணி, செப். 6: அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படாததால் மாணவ, மாணவிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
÷கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் கடந்த ஜூன் 15-ம் தேதி திறக்கப்பட்டது. பள்ளிகள் திறந்து 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. ÷திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரையில் பிளஸ் 2 புத்தகங்கள் தாவரவியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, அதேபோல் பிளஸ் 1 மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட 4 ஆயிரம் புத்தகங்கள், மாணவர்களுக்கு வழங்க வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
÷தமிழக அரசு, சென்ற ஆண்டு 1 மற்றும் 6 ம் வகுப்புகளுக்கு சமச்சீர் பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. நடப்பு கல்வி ஆண்டில் 10-ம் வகுப்புவரை சமச்சீர் பாடத்திட்டத்தை அமல்படுத்தப்படும் என அறிவித்தது.
÷இந்நிலையில் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, சமச்சீர் பாடத்திட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும், இந்தாண்டு பழைய பாடத்திட்டமே தொடரும் என அறிவித்தார்.
÷இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சமச்சீர் பாடத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஆகஸ்ட் 9-ம் தேதி தீர்ப்பு கூறியது.
÷அதையேற்ற தமிழக அரசு, ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சமச்சீர் பாடப் புத்தகம் வழங்கப்படும் என அறிவித்தது.
÷ஆனால் முழுமையான அளவுக்கு புத்தகங்கள் இல்லாததால் ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் இரண்டு அல்லது மூன்று புத்தகங்கள் மட்டும் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
÷ஆனால் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சமச்சீர் கல்வி பாடபுத்தகங்கள் இன்னும் புத்தகங்கள் வழங்கப்படவில்லை.
÷அதேபோல் ஒருசில தனியார் பள்ளிகளிலும் இன்னும் சமச்சீர் கல்வி புத்தகங்கள் வழங்கப்படவில்லை.
÷மாணவர்களுக்கு புத்தகங்களும் முழுமையாக வழங்காத நிலையில் தமிழக அரசு வரும் செப்டம்பர் 22-ம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்கும் என அறிவித்துள்ளது. தேர்வுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் முழுமையாக புத்தகங்கள் வழங்கப்படாததால் தேர்வுக்கு எப்படி தயாராவது? எனப் புரியாமல் மாணவ, மாணவிகள் பரிதவித்து வருகின்றனர்.÷இது குறித்து மாவட்டக் கல்வி அலுவலர் உரிய நடவடிக்கை எடுத்து அரசுப் பள்ளகளில் புத்தகங்களின் தேவை அறிந்து சம்மந்தப்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு புத்தகங்கள் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!

4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்! மீண்டும் கோளாறு - காங்கிரஸ் புகார்!

பிரதமர் மோடியின் இரட்டைத் தோல்வி! எரிவாயு உற்பத்தி சரிவு, உரங்கள் தட்டுப்பாடு: கார்கே
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


