தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

குடிநீரில் கலக்கும் கழிவுநீர்

திருத்தணி, செப். 4: குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் தொற்று நோய் பரவும் அச்சத்தில் ஸ்டாலின் நகர் வாசிகள் உள்ளனர். கழிவுநீரை வெளியேற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:14 am

திருத்தணி, செப். 4: குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் தொற்று நோய் பரவும் அச்சத்தில் ஸ்டாலின் நகர் வாசிகள் உள்ளனர். கழிவுநீரை வெளியேற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருத்தணி நகராட்சிக்கு உள்பட்ட 14-வது வார்டு சுவால்பேட்டை முதல் தெருவில் கடந்த 3-ஆண்டுகளுக்கு முன் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. கால்வாய் கட்டப்பட்ட சிறிது நாள்களிலேயே சுவால்பேட்டை பகுதியில் தனியார் செல்போன் நிறுவனம் சார்பில் செல்போன் டவர் ஒன்று கட்டப்பட்டபோது கட்டுமான பொருட்களை எடுத்து செல்ல அப்பகுதியில் இருக்கும் கழிவுநீர் கால்வாயை ஊழியர்கள் உடைத்தனர்.

ஆனால் கழிவுநீர் கால்வாயை மீண்டும் நாங்கள் கட்டித்தருகிறோம் என செல்போன் அதிகாரிகள் உறுதி கூறினர். தற்போது 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் உடைக்கப்பட்ட கால்வாய் இன்னும் சரிசெய்யப்படவில்லை.

இதனால் அவ்வழியாக வரும் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. அதேபோல் சுவால்பேட்டை முதல் தெருவில் கைபம்பில் (போரில்) அப்பகுதி மக்கள் குடிநீர் பிடித்துச் செல்கின்றனர். இந்த கைப் பம்பு அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் கைப் பம்பின் அடியில் சிறு ஓட்டை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் ஓடும் கழிவுநீர் அந்த கைபம்பு ஓட்டையில் கலந்து குடிநீரில் கலக்கிறது.

இதனால் கைப் பம்பில் பிடித்து செல்லும் குடிநீரால் உடல் உபாதகைள் ஏற்படுகின்றன என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

கழிவுநீர் சாலையில் தேங்கி செல்வதாலும், அப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதாலும் அப்பகுதி முழுவதும் தூர்நாற்றம் வீசுகிறது. சுவால்பேட்டை முதல் தெருவில் திறந்த வெளியில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாயை மூடாததால் இருசக்கர வாகனங்களில் வருவோர் சிலர் கால்வாயில் விழுந்து பலத்த காயமடைகின்றனர்.

மேலும் அப்பகுதியில் இருக்கும் தனியார் திருமண மண்படத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கழிவுநீரில் கால்வாயில் கலப்பதால் எப்போதும் தூர்நாற்றம் வீசுகிறது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதே நிலை நீடித்தால் அப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கானோருக்கு காலரா, மலேரியா, சிக்குன் குனியா, டெங்கு காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் வரக்கூடும் என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

எனவே இதுகுறித்து திருத்தணி நகராட்சி நிர்வாகம் கைம்பில் ஏற்பட்டுள்ள ஓட்டையை சரி செய்ய வேண்டும் எனவும், கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பையும் சரி செய்ய வேண்டியும், கழிவுநீர் கால்வாய் மேல் சிமென்ட் சிலாபுகளைப் போடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.