திருத்தணி, ஜூன் 16: மாமண்டூரில் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் பூட்டிக்கிடக்கும் நூலகத்தை விரைவில் திறக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்தணி அடுத்துள்ள மாமண்டூர் ஊராட்சியில் 100-க்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன. இவர்கள் பெரும்பாலும் கூலி வேலை செய்யும் நடுத்தர பிரிவைச் சேர்ந்த மக்கள். இங்குள்ள மாணவ, மாணவியர் பொது அறிவை வளர்த்துக்கொள்ளவும், அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகளை படித்து தெரிந்துகொள்ளவும், மேலும் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களுக்கு குறிப்புகள் எடுக்க 10 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தணி கிளை நூலகத்துக்கு செல்ல வேண்டியுள்ளது.
மாமண்டூரில் நூலகம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் ஊராட்சி ஒன்றியத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2009 - 2010 ஆம் ஆண்டு அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், மூன்று லட்சம் ரூபாய் செலவில் நூலகக் கட்டடம் மாமண்டூர் கிராமத்தில் கட்டப்பட்டது. நூலகக் கட்டடப் பணிகள் முடிந்தும், 6 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் கட்டடம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.
தற்போது கோடை கால விடுமுறை என்பதால் நூலகம் திறந்திருந்தால் பள்ளி, கல்லூரியில் பயிலும் ஏராளமான மாணவ, மாணவிகள், முதியோர்கள், படித்த இளைஞர்கள் என அனைவரும் தங்கள் பொது அறிவை வளர்த்துக்கொள்ளவும், தினசரி நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்களை படித்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.
ஆனால் புதிதாகக் கட்டப்பட்ட நூலகக் கட்டடம் திறக்கப்படாததால் 25 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட அய்யன் திருவள்ளூவர் படிப்பகத்துக்கு வரும் தினசரி நாளிதழ்களை மட்டுமே இக்கிராம மக்கள் படித்து வருகின்றனர்.
இதுகுறித்து கல்லூரி மாணவி டி.தீபா கூறும்போது, நான் திருத்தணி கலைக்கல்லூரியில் படித்து வருகிறேன். அதேபோல் எங்கள் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அருங்குளம் உயர்நிலைப் பள்ளியிலும், திருத்தணி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேனிலைப் பள்ளியில் படிக்கின்றனர். எங்கள் கிராமத்தில் கட்டப்பட்ட நூலகம் பார்ப்பதற்கு அழகாக உள்ளதே தவிர இன்னும் நூலகக் கட்டடம் திறக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் பொது அறிவை வளர்த்துக்கொள்ளவும், குறிப்புகள் எடுத்துக்கொள்ளவும் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருத்தணி கிளை நூலகத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. விரைவில் இந்த நூலகம் திறக்கப்பட்டால் எங்களைப் போன்ற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார் அவர்.
இதுகுறித்து திருவாலங்காடு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மாமண்டூர் கிராமத்தில் உள்ள நூலகக் கட்டத்தை திறந்து கிராம பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!

4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்! மீண்டும் கோளாறு - காங்கிரஸ் புகார்!

பிரதமர் மோடியின் இரட்டைத் தோல்வி! எரிவாயு உற்பத்தி சரிவு, உரங்கள் தட்டுப்பாடு: கார்கே
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


