திருத்தணி, ஜூன் 11: திருத்தணி பஸ் நிலைய இடநெருக்கடியால் குறித்த நேரத்தில் பஸ்களை இயக்க முடியாமல் அரசு மற்றும் தனியார் பஸ் ஓட்டுநர்கள் தினசரி கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருத்தணி அண்ணா பஸ் நிலையத்துக்கு தினசரி 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. திருத்தணியில் முருகன் கோயில், ஒருங்கிணைந்த நீதிமன்றம், வருவாய் கோட்ட ஆட்சியர் அலுவலகம், துணை காவல்துறை கண்காணிப்பு அலுவலகம், வட்டாட்சியர் அலுவகம், தலைமை தபால் அலுவலகம், டி.1 காவல் நிலையம், சார் பதிவாளர் அலுவகம், கிளை சிறைச்சாலை, அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்டவை திருத்தணியில் இயங்கி வருகிறது.
மேலும் அண்டை மாநிலங்களாகன பாண்டிச்சேரி, ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் முருகன் கோயிலுக்கு தினசரி நூற்றுக்கணக்கானோர் கார், வேன்களில் வந்து செல்கின்றனர்.
பல்வேறு பணிகள் காரணமாக மேற்குறிப்பிட்ட அலுவலகங்களுக்கு திருத்தணியை சுற்றியுள்ள பல்வேறு கிராங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் திருத்தணி நகருக்கு வந்து செல்ல முக்கிய ஆதாரமாக இருப்பது பஸ்கள் மட்டுமே ஆகும். ஆனால் திருத்தணி பஸ் நிலையமோ இடநெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் பஸ் ஓட்டுநர்கள் பஸ்ûஸ இயக்க முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் பஸ் நிலையத்தில் பிளாட்பாரக் கடைகள் வைத்து பஸ் நிலையத்தை ஆக்கிரமிப்பு செய்து வியாபாரிகள், கடைகள் போட்டு பூ, பழங்களை வைத்து விற்பனை செய்கின்றனர்.
இது குறித்து பஸ் நிலைய அதிகாரி ஒருவர் கூறும்போது: "2 மணி நேரத்துக்குப் பிறகு செல்ல வேண்டிய அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதற்குரிய இடங்களில் (பிளாட்பார்ம்) அப்படியே நிறுத்தப்படுகின்றன.
இதனால் பஸ் நிறுத்தத்திலிருந்து பஸ்ûஸ பின்புறம் இயக்கி வெளியே எடுப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.
இதுமட்டும் அல்லாமல் ஒழுங்கின்றி நிறுத்தப்பட்டிருக்கும் பஸ்களுக்கு இடைவெளிகளிலும், உதவி காவல் மையம் எதிரிலும் பயணிகளும், பஸ் ஓட்டுநர்களும் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் பஸ் நிலையமே சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. 1, 2 ஆகிய பஸ் நிறுத்தும் இடங்களில் (பிளாட்பார்ம்) இந்த நிலை நீடிக்கிறது.
சிக்கல் நிறைந்த வழித்தடங்களை முறையாக பிரிப்பது, குறைந்த பஸ்கள் நிறுத்தப்படும் 5, 6-களில் மற்ற பஸ்களை நிறுத்த அனுமதிப்பது, அந்தந்த நேரங்களில் செல்லவேண்டிய பஸ்களை மட்டும் அதற்குரிய இடங்களில் அனுமதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் நெரிசலை குறைக்க முடியும். இதுபோன்ற காரணங்களால் பயணிகள் பாதிக்கப்படுவதோடு, குறித்த நேரத்தில் பஸ்களை இயக்க முடியாமல் பஸ் ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகின்றனர்' என்றார் அவர்.
இது குறித்து நகராட்சி அலுவலர் ஒருவர் கூறும்போது: "திருத்தணியில் இருக்கும் பஸ் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு நகல் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இது றித்து நடவடிக்கை எடுத்து இடத்தை தேர்வு செய்து கொடுத்தால் வேறு இடத்தில் புதிய பஸ் நிலையத்தை அமைத்தால் இதுபோன்ற இடநெருக்கடி ஏற்படாமல் இருக்கும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!

4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்! மீண்டும் கோளாறு - காங்கிரஸ் புகார்!

பிரதமர் மோடியின் இரட்டைத் தோல்வி! எரிவாயு உற்பத்தி சரிவு, உரங்கள் தட்டுப்பாடு: கார்கே
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


