தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஆமை வேகத்தில் நந்தி ஆற்று உயர்மட்ட மேம்பாலப் பணிகள்

திருத்தணி, ஜூன் 8: திருத்தணி நந்தி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.  ÷திருத்தணி - திருவள்ளூர் தேசிய நெடுஞ்ச

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:33 am

திருத்தணி, ஜூன் 8: திருத்தணி நந்தி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

 ÷திருத்தணி - திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் காசிநாதபுரம் கிராமம் அருகே நந்தி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்தது தரைப்பாலம். இப்பாலம் மிகவும் குறுகிய அளவில் இருந்ததால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். மேலும் மழை காலத்தில் தரைப்பாலத்தின் மீது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போதும் போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

 ÷இதையடுத்து உயர்மட்ட மேம்பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலை துறை ரூ.3- கோடியே 40- லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதற்கான பணிகள் கடந்த 2009-2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. பிறகு மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தற்காலிகமாக பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன. மே மாதத்தில் இருந்து மீண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

 ÷திருத்தணியில் இருந்து சென்னை, திருவள்ளூர், நாகலாபுரம் ஆகிய ஊர்களுக்கும், திருத்தணி சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் செல்ல இச்சாலையையே வாகன ஓட்டிகள் பயன்படுத்துகின்றனர். உயர்மட்ட மேம்பாலம் அருகே உள்ள சாலையும் குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் இரவு நேரங்களில் இச்சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் வந்தபோது பள்ளத்தில் சிக்கி இதுவரை 2 பேர் உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது.

 ÷இப்பாலத்தை 15 மாதங்களுக்குள் கட்டி முடிக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை கால அவகாசம் கொடுத்திருந்தது. தற்போது 2 ஆண்டுகள் ஆகியும் கட்டுமானப் பணிகள் ஆமை வேகத்திலேயே நடைபெற்று வருகின்றன.

 ÷இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்படுகின்றனர். இப்பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள் மற்றும் திருத்தணி வாழ் மக்களின் கோரிக்கையாகும்.

 ÷இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.