"மின்வெட்டு, சர்வதேச பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் உள்ளூர் தொழிலாளர்கள், வேறு தொழில்களுக்கு மாறிவிட்டனர். இதனால், வெளிமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். அவ்வாறு அமர்த்தப்பட்டவர்களில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோவையில் இருந்து வெளியேறிவிட்டனர். இதனால் குறுந்தொழில்கூடங்களில் 30 முதல் 40 சதவீதம் வரை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தில் இருந்து கோவைக்கு வரும் தொழிலாளர்கள் குறித்த விவரத்தை உள்ளூர் காவல் நிலையங்களில் பராமரிக்க வேண்டும். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுவதுடன் உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்கிறார் தமிழ்நாடு ஊரகத் தொழில் மற்றும் குறுந்தொழில்முனைவோர் சங்க (டேக்ட்) கோவை மாவட்டத் தலைவர் ஜே.ஜேம்ஸ்.