பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் சேத்துப்பட்டு பஸ் நிலையம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் 92 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பஸ் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரவேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். சேத்துப்பட்டு பேரூராட்சியில் சிமென்

News image
Updated On :27 டிசம்பர் 2023, 5:23 pm

பி.ஜெயச்சந்திரன்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் 92 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பஸ் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரவேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சேத்துப்பட்டு பேரூராட்சியில் சிமென்ட் ஷீட்டால் அமைக்கப்பட்டிருந்த கட்டடத்தில் பஸ் நிலையம் இயங்கி வந்தது. இதனால் இங்கு பஸ்கள் நிற்காமல், செஞ்சி சாலையில் நின்று வந்தன.

மாவட்ட நிர்வாகம் உத்தரவிடும்போது, பஸ் நிலையத்தில் சில நாள்கள் மட்டும் இங்கு பஸ்கள் நின்று செல்லும். பின்னர் பழைய நிலையே தொடர்ந்து வந்தது.

இதையடுத்து, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பஸ் நிலையம் கட்ட வேண்டும் என தமிழக அரசு மற்றும் உணவுத் துறை அமைச்சர் எ.வ. வேலுவிடம் இத் தொகுதி எம்.எல்.ஏ. கோ.எதிரொலிமணியன் வலியுறுத்தினார்.

இதையடுத்து, கடந்த ஆண்டு இங்கு பஸ் நிலையம் கட்ட |30 லட்சத்தை தமிழக அரசு வழங்கியது. பின்னர் பேரூராட்சி நிதியிலிருந்தும் நிதி ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, |92 லட்சத்தில் பஸ் நிலையமும் கட்டி முடிக்கப்பட்டது. பணிகள் நிறைவு பெற்று, சில மாதங்களாகியும் இன்னும் பஸ் நிலையம் திறக்கப்படவில்லை. இதுகுறித்து எம்.எல்.ஏ. கோ.எதிரொலிமணியன் கேட்டபோது, பஸ் நிலையத்தைத் திறப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.