/

குடியிருப்புகள் தரும் நெருக்கடி தேவை கூடுதல் தொழில்பேட்டைகள்!

கோவை: கோவையில் உள்ள குறுந்தொழில் கூடங்களுக்கு குடியிருப்பு வீடுகளால் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  எனவே, கோவையில் கூடுதல் எண்ணிக்கையில் குறுந்தொழில்பேட்டைகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:03 pm

ஜெபலின்ஜான்

கோவை: கோவையில் உள்ள குறுந்தொழில் கூடங்களுக்கு குடியிருப்பு வீடுகளால் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 எனவே, கோவையில் கூடுதல் எண்ணிக்கையில் குறுந்தொழில்பேட்டைகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

  பெருந்தொழில் நிறுவனங்களுக்கு முதுகெலும்பாக இருக்கும் குறுந்தொழில்

நிறுவனங்கள் இப்போது கடும் நெருக்கடியில் சிக்கிதவிக்கின்றன. இரண்டரை

ஆண்டுகளாக மின்வெட்டுப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த இக் குறுந்தொழில் கூடங்களுக்கு சில நாட்களாக விடுதலை கிடைத்துள்ளது.

  இருப்பினும் குறுந்தொழில் கூடங்களில் ஆட்கள் பற்றாக்குறை, நிதி நெருக்கடி,

குடியிருப்புகளின் தொல்லை உள்ளிட்ட பிற நெருக்கடிகள் தொடர்கின்றன. நிதி நெருக்கடி, ஆட்கள் பற்றாக்குறை போன்ற பிரச்னைகளைத் தீர்க்க குறுந்தொழில் சங்கங்கள் தீவிர முயற்சி எடுதது வருகின்றன.

  ஆனால், குடியிருப்புகளால் ஏற்படும் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் தவிக்கின்றனர் குறுந்தொழில்கூட உரிமையாளர்கள். கோவையில் இயங்கும் 30 ஆயிரம் குறுந்தொழில் கூடங்களில் 90 சதவீதம் வாடகை கட்டடங்களில்தான் இயங்கி

வருகின்றன. இவை பெரும்பாலும் குடியிருப்புகளுக்கு மத்தியில் இருப்பதால் தனிப்பட்ட முன்விரோதங்களை மனதில் வைத்து சுற்றுச்சூழல் தொடர்பாக

புகார்களை கிளப்பிவிடுகின்றன குடியிருப்பு நலச் சங்கங்கள். இந்தப் புகார் வந்த அடுத்த நிமிடமே எவ்வித விசாரணையும் இன்றி குறுந்தொழில் கூடங்களை மூட எச்சரிக்கை நோட்டீஸ்களை மாசுகட்டுப்பாட்டு வாரியம் அனுப்புகிறது என குற்றஞ்சாட்டுகின்றனர் குறுந்தொழில்கூட உரிமையாளர்கள்.

 ""குறுந்தொழில் கூடங்களுக்காக தனி தொழில்பேட்டை அமைக்க மயிலம்பட்டியில் 22 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் ஊரகத் தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி அறிவித்துள்ளார். அங்கு சுமார் 400 குறுந்தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் தான் இடம் கிடைக்கும். ஆனால், கோவையில் சுமார் 20 ஆயிரம் குறுந்தொழில் கூடங்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் இயங்கி வருகின்றன. எனவே, கோவையில் கூடுதல் குறுந்தொழில்பேட்டைகள் அமைக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 தடாகம் சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை, பொள்ளாச்சி சாலை, அவிநாசி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் குறுந்தொழில்பேட்டைகள் அமைக்க

தரிசு நிலங்களை அரசு கையகப்படுத்த வேண்டும். இங்கு அடுக்குமாடி குறுந்தொழில் கூடங்கள் அமைத்தால் கூடுதல் பயன்கிடைக்கும்'' என்கிறார் தமிழ்நாடு ஊரகத் தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க (டேக்óட்) கோவை மாவட்டத் தலைவர் ஜே.ஜேம்ஸ்.

  "சாயப்பட்டறை, தோல்பதனிடும் ஆலைகள் ஆகியவற்றை ஒப்பிடும்போது குறுந்தொழில் கூடங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீரின் அளவு மிகக் குறைவு. அதேபோல இங்கு இயக்கப்படும் குறுந்தொழில் கூடங்களில் வெளிவரும் ஒலியின்

அளவும் மிகவும் குறைவுதான். கோவையில் குறுந்தொழில் பேட்டை அமைக்க அரசு எடுத்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. இருப்பினும் கூடுதல் எண்ணிக்கையில் குறுந்தொழில் பேட்டை அமைந்தால் குறுந்தொழில் முனைவோர்களுக்கு பயன்

கிடைக்கும்'' என்கிறார் கோவை மற்றும் திருப்பூர் ஊரகத் தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர் எஸ்.ரவிக்குமார்.     

  குறுந்தொழில் கூடங்களின் குறுந்தொழில் பேட்டை கனவு நனவாவது மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையை பொருத்தே அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.