பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஒரே வீட்டில் 3 குடும்பங்கள்:​ பரிதவிக்கும் இலங்கை தமிழர்கள்!

இலங்கைத் தமிழர்களுக்கான அரச்சலூர் இடைத்தங்கள் முகாம். அருகே  தேங்கியுள்ள சாக்கடை,  அப்புறப்படுத்தப்படாமல் குவிந்து கிடக்கும் குப்பைகள். ஈரோடு, : தேங்கியுள்ள சாக்கடை, அப்புறப்படுத்தப்படாமல் குவிந்து கி

News image
Updated On :27 டிசம்பர் 2023, 3:57 pm

கே.விஜயபாஸ்கா்

இலங்கைத் தமிழர்களுக்கான அரச்சலூர் இடைத்தங்கள் முகாம். அருகே  தேங்கியுள்ள சாக்கடை,  அப்புறப்படுத்தப்படாமல் குவிந்து கிடக்கும் குப்பைகள்.

ஈரோடு, : தேங்கியுள்ள சாக்கடை, அப்புறப்படுத்தப்படாமல் குவிந்து கிடக்கும் குப்பைகள், ஒரே தடுப்பில் மூன்று குடும்பங்கள் என அடிப்படை வசதிகளின்றி பரிதவித்து வருகின்றனர் அரச்சலூர் இடைத்தங்கல் முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள்.

ஈரோடு மாவட்டம், வடுகபட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட அரச்சலூரில் இலங்கை தமிழர்களின் இடைத்தங்கல் முகாம் செயல்பட்டு வருகிறது. கடந்த 1990-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்த முகாமில் தற்போது 125 குடும்பங்களைச் சேர்ந்த 624 பேர் வசிக்கின்றனர். இங்கு தங்கியுள்ள குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் 10-க்கு 10 அளவில் ஆஸ்பெட்டாஸ் கூரையைக் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த 1990-ம் ஆண்டு இம்முகாமிற்கு வந்தபோது சில குடும்பங்களில் சிறுவர், சிறுமியர்களாக இருந்தவர்களுக்கு தற்போது திருமணமாகி, அவர்களுக்கு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் திருமணமாகி, அவர்களும் தனி குடும்பமான பிறகும் சுமார் 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இதுவரை தனி தடுப்புகள் அமைத்துக் கொடுக்கப்படவில்லை. இதனால் ஒரு சில தடுப்புகளில் 15 பேர் வரை வாழ்ந்து வருகின்றனர்.

அரசு உத்தரவுப்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்ட பிறகு முகாமை சுற்றி சாக்கடை கால்வாய்கள் அமைக்கப்பட்டன. முகாமின் வடக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கால்வாய் இடிந்து விழுந்து சாக்கடை நீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. மேலும் வடுகபட்டி பேரூராட்சி சார்பில் 6 மாதங்களுக்கு முன்பு வைக்கப்பட்ட குப்பைத் தொட்டி நிரம்பியுள்ளது. இந்த தொட்டியில் உள்ள குப்பைகள் அப்புறப்படுத்தப்படாமல் இருப்பதால் குடியிருப்பு அருகில் திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்பட்டு அவையும் அள்ளப்படாமல் உள்ளன. ÷இதனால் இப்பகுதியில் சுகாகார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்கள் கழிப்பறைகளில் 22 அறைகளும், பெண்கள் கழிப்பறைகளில் 24 அறைகளும் உள்ளன. முகாமில் உள்ள 625 பேருக்கும் இந்த கழிப்பறைகள் போதுமானதாக இல்லை. இதனால் முகாமின் அருகில் கீழ்பவானி வாய்க்கால் கரை, முகாம் மக்களுக்கு திறந்தவெளி கழிப்பறையாகிவிட்டது.

முகாமிற்கு சிறுவனாக வந்து, தற்போது திருமணமாகி, குழந்தைக்கு தந்தையாகிவிட்ட இளைஞர் ஒருவர் தெரிவித்தது:÷முகாமில் உள்ளவர்களுக்கு திருமணமான பிறகு, தனி வீடு கிடைப்பதில்லை. இதனால் குடியிருப்பின் கடைக்கோடியில், கீழ்பவானி வாய்க்கால் அருகே, சொந்தமாக குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இதுபோல் சுமார் 25 குடிசைகள் உளளன. இந்த குடிசைகள் அனைத்தும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள மக்கள் தாங்களாகவே அமைத்துக் கொண்டவை. அமைச்சர்கள் அல்லது உயரதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது தான் குப்பைகள் அள்ளப்படும். சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படும்.

இங்குள்ள குறைகள் குறித்து தெரிவித்தால், அதிகாரிகள் மற்றும் போலீசாரால் பல்வேறு வகையில் அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடுகிறது. குறிப்பாக பத்திரிகைகளில் செய்தி வந்தால் போதும் அதிகாரிகளின் மிரட்டல் மிகவும் மோசமாக இருக்கும்.

இங்குள்ளவர்களில் பெரும்பாலனோர் மிகவும் ஏழ்மை நிலையில்தான் உள்ளனர். இங்குள்ளவர்களில் பலர் சுயதொழில் அறிந்தவர்கள். இவர்களுக்கு வங்கி கடன் கிடைக்கும்பட்சத்தில் வாழ்க்கை தரம் ஓரளவுக்கு மேம்படும். பெரும்பாலும் கூலி வேலைக்குச் சென்று வரும் இவர்கள், கந்து வட்டிக்காரர்களிடம் சிக்கி பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இக்கொடுமையில் இருந்து இங்குள்ளவர்களை மீட்டெடுக்க, மகளிர் சுயஉதவிக் குழு அமைப்புகளை வலுப்படுத்துவதோடு, அரசு உதவிகளும் அதிகரிக்கப்பட வேண்டும்.

முகாமில் உள்ள ஒரு சிலரே கந்துவட்டி தொழில் ஈடுபட்டு, இங்குள்ள மக்கள் பலரின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். இச்செயலுக்கு போலீஸôரும் உதவியாக உள்ளனர் என்றார்.

இது குறித்து அகதிகள் மறுவாழ்வுத்துறை உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, முகாம்களில் அடிப்படை வசதிகள் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இம்முகாமில் 8 குடும்பங்களுக்கு குடியிருப்புகள் தேவை என இங்குள்ள மக்கள் தெரிவித்த கோரிக்கையின் அடிப்படையில், அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் குடியிருப்புகள் அமைக்கப்படும். அண்மையில்தான் கூடுதல் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

அதிகாரிகள் மற்றும் போலீஸôரால் இடையூறுகள் இருந்தால் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கலாம். இங்கு கந்துவட்டி கொடுமை இருப்பது கண்டறிப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.