ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

2006 எஸ்.ஐ. தேர்வு வினாத்தாள் குளறுபடி: 4 ஆண்டுகளாகியும் தீர்வு கிட்டாத நிலை

கடையநல்லூர், மே 5: தமிழகம் முழுவதும் 2006-ம் ஆண்டு நடைபெற்ற சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு வினாத் தாளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக சரியான விடை எழுதியிருந்தும் தேர்வு பெற முடியாமல் 70-க்கும் மே

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:57 pm

கடையநல்லூர், மே 5: தமிழகம் முழுவதும் 2006-ம் ஆண்டு நடைபெற்ற சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு வினாத் தாளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக சரியான விடை எழுதியிருந்தும் தேர்வு பெற முடியாமல் 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், மே 10 - ம் தேதி நடைபெறவுள்ள காவல் துறை மானியக் கோரிக்கையின்போதாவது தங்களுக்கு விடிவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

2006-ம் ஆண்டு 682 (ஆண்கள் - 571, பெண்கள் - 111)பணியிடங்களில், சார்பு ஆய்வாளர்களை நியமிக்கும் வகையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமச் சார்பில் தேர்வு நடைபெற்றது.

இதில் பொதுப் பிரிவினருக்கு 31 சதவிகிதமும், பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவிகிதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவிகிதமும், எஸ்.சி. பிரிவிற்கு 18 சதவிகிதமும், எஸ்.டி. பிரிவிற்கு 1 சதவிகிதமும் ஒதுக்கீடு அளிக்கப்பட்டு, அவர்கள் தேர்வில் பெற வேண்டிய கட்-ஆப். மதிப்பெண்களும் தெரிவிக்கப்பட்டது.

70 மதிப்பெண்களுடன் கூடிய, இந்த தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு உரிய சரியான விடைகள், தேர்வு வாரியத்தின் மூலம்தயாரிக்கப்ட்டு (key for the   SI recruitment -2006 ), அதன் அடிப்படையிலேயே மதிப்பெண்களும் வழங்கப்பட்டன. ஆனால், கேள்வி எண் 11, 38, 44 ஆகிய கேள்விகளுக்கான விடைகள் கீ-ஆன்ஸரிலேயே (ந்ங்ஹ் ஹய்ள்ஜ்ங்ழ்) தவறாக குறிக்கப்பட்டிருந்தாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அந்த வினாக்களுக்கு சரியான விடையை எழுதிய பலரும் பாதிககப்பட்டுள்ள நிலையில், அந்த வினாவிற்கு சரியான விடை எழுதாத பலரும் சார்பு-ஆய்வாளர்களாக தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள், 21-4-09 ல், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் பொது தகவல் அலுவலரிடம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், விளக்கம் கேட்ட நிலையில், கேள்வி எண் 44 உள்ளிட்ட வினாக்களுக்கு மதிப்பெண் வழங்குவது மற்றும் அவர்களை நிபந்தனை தேர்வு செய்வது தொடர்பான கோப்பு அரசின் பரிசீலனையில் உள்ளதாக அதற்கு பதிலளிக்கப்பட்டுள்ளது (ந.க.எண்-அ110722009).

பின்னர், 23-6-09 ல் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ்பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் கேட்டுள்ள கேள்விக்கு சார்பு -ஆய்வாளர் தேர்வு - 2006-க்காக அறிவிக்கை செய்யப்பட்ட மொத்த காலிப்பணியிடங்களுக்கான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர்.

சார்பு-ஆய்வாளர் தேர்வு -2006ல் நிரப்பபட வேண்டிய காலிப்பணியிடங்கள் ஏதும் இல்லை. எனவே சார்பு-ஆய்வாளர் தேர்வு-2006ல் கேட்கப்பட்ட வினாக்களுக்கு மதிப்பெண் வழங்குவது,தாற்காலிக தேர்வு செய்வது ஆகியவற்றைப் பரிசீலனை செய்ய இயலாது என பதிலளிக்கப்பட்டுள்ளது (ந.க.எண். அ125902009)

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நீதிமன்றம் (ர.ட.சர். 262542009) உத்தரவிட்டதுடன், வருங்காலங்களில் இது போன்ற தேர்வுகளில் கீ-ஆன்ஸரை சரிபார்த்து, அதனை இணையதளத்தில் வெளியிடுவதுடன், நாளிதழிலும் பிரசுரிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இருப்பினும், இன்று வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு பணியிடங்கள்வழங்கப்படாத நிலையில் அவர்கள் கடுமையான வேதனையில் உழன்று வருகின்றனர்.

 எனவே 10- ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள காவல்துறை மானியக் கோரிக்கையின்போதாவது தங்களுக்கு விடிவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் இவர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.