வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு இல்லை?: மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சத இடஒதுக்கீடு வேலைவாய்ப்பில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கண் பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள், உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு தலா ஒரு சதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மனநலன் குன்றியவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடும் கிடைப்பதில்லை, வாய்ப்பும் கிடைப்பதில்லை.வெளிநாடுகளில் உள்ளதுபோல, உறுதிப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு என்ற பிரிவின் கீழ், மொத்தமுள்ள இடங்களில் 30 சதத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்கிறார் தாமஸ் எபிநேசர்.