இதன் மூலம் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களும், ஸ்ரீபெரும்புதூர், திருச்செங்கோடு, சிவகாசி ஆகிய மக்களவைத் தொகுதிகளிலும் மறுவாழ்வு மையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த மையங்கள் மூலம் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் பயன்பெற்று வந்தனர். மையம் மூலம் கால் குறைபாடு உள்ளோருக்கு செயற்கைக்கால் பொருத்துதல், மூன்று சக்கர சைக்கிள் வாங்கித் தருதல், பார்வைக் குறைபாடு உடையோருக்கு கருப்புக் கண்ணாடிகள் வழங்குதல், கேட்கும் குறைபாடு உள்ளோருக்கு காதொலி கருவிகள் வழங்குதல் போன்றவை செயல்படுத்தப்பட்டன.