நீங்கா நினைவுகளுடன் நூற்றாண்டு கண்ட தியாகி!
சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு இலவச ரயில் பாûஸ ரயில்வே துறை வழங்கி வருகிறது. ஆனால், 99 வயதை கடந்துவிட்டால் இலவச பாஸ் வழங்க துறை ரீதியாக அனுமதி இல்லை எனக்கூறி 2 ஆண்டுகளுக்கு முன்பே தியாகி சுப்பிரமண


கோவை, ஜூலை 16: தனது 101-வது பிறந்தநாளை மிகவும் எளிமையாகக் கொண்டாடி தனது நீங்கா நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் சுதந்திரப் போராட்டத் தியாகி சி.எஸ்.சுப்பிரமணியம்.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் கோமல் கிராமத்தைச் சேர்ந்த சி.எஸ்.சுந்தரம் அய்யர்-மீனாட்சி அம்மாள் தம்பதிக்கு 2-வது மகனாக பிறந்தவர் சுப்பிரமணியம். இவருக்கு 2 சகோதரர்களும், 2 சகோதரிகளும் உண்டு. தந்தை சுந்தர அய்யர் சென்னையில் முதன்மைக் கல்வி அலுவலராகவும், சென்னை பல்கலைக்கழகத்தில் வாக்குப்பதிவு முறையில் தேர்வு செய்யப்பட்ட செனட் உறுப்பினராகவும் இருந்ததால், இவரது குடும்பம் சென்னையில் குடியேறியது.
அங்கேயே படித்த சுப்பிரமணியம், சென்னை பிரசிடென்சி கல்லூரியில் 1931-ல் எம்.ஏ. (ஹானர்ஸ்) பட்டம் பெற்றார். மகன் ஐ.சி.எஸ். படித்து அதிகாரியாக வேண்டும் என்பதற்காக இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு சுப்பிரமணியத்தை அனுப்பினார் சுந்தர அய்யர். ஆனால், அங்கு சென்ற அவர் இடதுசாரி இயக்கக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.
பல்வேறு புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபடத் துவங்கினார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அக்டோபர் கிளப் என்ற பெயரில் மாணவர் அமைப்பை உருவாக்கினார். பின்னர் ஐ.சி.எஸ். படிப்பது முக்கியம் அல்ல எனக் கருதி தாயகம் திரும்பிய இவர், 1935-ல் தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக அமைப்பு ரீதியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளையை சென்னையில் துவங்க பிதாமகனாக செயல்பட்டார். இன்றைய பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியை சேர்ந்த மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் அமீர் ஹைதர்கான் உதவியுடன் இக் கிளையை சுப்பிரமணியம் துவக்கினார்.
அக் கிளை துவக்கப்பட்டபோது கம்பம்பாடி சத்தியநாராயணன் (சீனியர்), பாண்டிச்சேரி வி.சுப்பையா, வி.கே.நரசிம்மன், நெல்லூர் பி.சுந்தரய்யா ஆகியோர் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தனர். கம்யூனிஸ்ட் தலைவர்களான ஜீவானந்தம், ராமமூர்த்தி உள்ளிட்டவர்கள் பின்னர் தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தனர்.
இடதுசாரி இயக்கத்தில் இருந்தாலும், நாட்டின் சுதந்திரத்துக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார் சுப்பிரமணியம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி தொடர்ந்து அக் கட்சியை வளர்த்ததில் முக்கியப் பங்காற்றியவர். அப்போது உள்துறைச் செயலராக இருந்த இவரது தம்பி சி.எஸ்.ராமச்சந்திரன், சுப்பிரமணியத்தை கைது செய்ய உத்தரவிட்டார் என்பது சுவாரஸ்யமான தகவல்.
1945-க்குப்பின் கட்சியில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த சுப்பிரமணியம், ஈரோடு மாவட்டம் கோபியில் தனது மனைவியுடன் குடியேறினார். 25 ஆண்டுகளுக்கு முன் அவரது மனைவி இறந்தபின் சுப்பிரமணியம் தனியாக வீட்டில் வசித்து வருகிறார். தன் வேலையைச் செய்ய அடுத்தவர் உதவியை நாடுவது சுப்பிரமணியத்துக்கு பிடிக்காது. பாரதியாரை மிகவும் நேசிப்பவர். தனக்கு வேண்டிய உணவுகளைத் தானே செய்து யாருக்கும் பாரமின்றி வாழ்கிறார் 100 வயதை கடந்த தியாகி சுப்பிரமணியம்.
அவர் தினமணிக்கு அளித்த சிறப்புப் பேட்டி:
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் முதலாளித்துவ அடிப்படையில் இயங்குவதால் தான் அங்கு அடிக்கடி நெருக்கடிகள் வருகின்றன. சர்வதேசப் பொருளாதார நெருக்கடி கூட அதனால் தான் ஏற்பட்டது. முதலாளித்துவம் இருக்கும் இடத்தில் ஊழல் வந்துவிடும். முதலாளித்துவத்திலும் நல்ல எண்ணம் கொண்டவர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்களால் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...