/

அரசுக் கல்லூரி முதல்வர்களுக்கு பதவி உயர்வு வழங்கியதில் பாரபட்சம்

சேலம்:  அரசு கல்லூரி முதல்வர்களுக்கு மண்டல இணை இயக்குநர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் 62 அரசு கலைக் கல்லூரிகளும் 5 கல்விய

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:43 pm

க. தங்கராஜா

சேலம்:  அரசு கல்லூரி முதல்வர்களுக்கு மண்டல இணை இயக்குநர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் 62 அரசு கலைக் கல்லூரிகளும் 5 கல்வியியல் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இதில்  கிரேடு-2 அரசு கலைக் கல்லூரி முதல்வர்களுக்கு கிரேடு-1 கல்லூரி முதல்வராகவும், கிரேடு-1 கல்லூரி முதல்வர்களுக்கு மண்டல இணை இயக்குநராகவும் கடந்த 9-ம் தேதி பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதாவது கிரேடு-2 கல்லூரி முதல்வர்கள் 9 பேருக்கு கிரேடு-1 கல்லூரியின் முதல்வர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். சென்னை காயிதே மில்லத் அரசு கலைக் கல்லூரி முதல்வர் பங்கஜவள்ளி கோவை மண்டல இணை இயக்குநராகவும், திருவெறும்பூர் அரசுக் கல்லூரி முதல்வர் நிர்மலா, திருச்சி மண்டல இணை இயக்குநராகவும், பர்கூர் அரசுக் கல்லூரி முதல்வர் தனலட்சுமி நெல்லை மண்டல இணை இயக்குநராகவும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசுக் கல்லூரி முதல்வர் சந்திரசேகர் மதுரை மண்டல இணை இயக்குநராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

 இதேபோல் முதல்வர்கள் ஜோதிகுமார், ராஜா ஆபிரகாம் தேவகுமார், சார்லஸ் ஜெபக்குமார் ஆகியோரும் இணை இயக்குநர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

 இவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது இப்போது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. ஏனெனில் வழக்கமாக அரசுத் துறைகளில் காலமுறை பதவி உயர்வானது பணி மூப்பின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பதவி உயர்வு விவகாரத்தில் அரசு உத்தரவுகள், விதி முறைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

  அதாவது இப்போது இணை இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளவர்கள் அனைவரும் 1978-ம் ஆண்டில் விரிவுரையாளர்களாக பணியில் சேர்ந்தவர்கள். ஆனால் இவர்களுக்கு முன்னதாக 1975-ம் ஆண்டில் பணியில் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படாமல் பின்னர் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதுதான் பிரச்னைக்கு காரணம்.

உயர் கல்வித்துறையின் இந்த உத்தரவால் கல்லூரிக் கல்வி இயக்குநர் ஜெயபாஸ்கரன் சார்லஸþக்கு அடுத்த பணி மூப்பில் உள்ள சேலம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் சீதாராமனும், கரூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் ராஜமாணிக்கமும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இணை இயக்குநர்களுக்கும் கிரேடு-1 கல்லூரி முதல்வர்களுக்கும் சம்பள விகிதத்திóல் மாற்றமில்லை என்றாலும், பணியில் ஜூனியர்களாக இருப்பவர்கள் அவர்களது சீனியர்கள் முதல்வராக இருக்கும் கல்லூரிக்கு வந்து ஆய்வு நடத்தி, உத்தரவு பிறப்பிக்கும் நிலை இப்போது உருவாகியுள்ளது. 15 நாள்களில் ஓய்வு பெறும்...

ஆனால் அதிகாரிகளின் இந்த கூற்றை பொய்யாக்குவதைப் போல் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் பதவிக் காலம் உள்ளது. உதாரணமாக இணை இயக்குநர் (நிதி) சார்லஸ் ஜெபக்குமார் என்பவர் வரும் ஜூலை 31-ம் தேதியிலேயே ஓய்வு பெற உள்ளார். அதேபோல் மேலும் இருவர் வரும் அக்டோபர், டிசம்பரிலும் ஓய்வு பெறுகின்றனர். ஒரே ஒருவரைத் தவிர மற்றவர்கள் நடப்பு கல்வியாண்டிலேயே ஓய்வு பெறக் கூடியவர்களாக உள்ளனர்.

இதனால் அதிகாரிகள் கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை என்று கல்லூரி முதல்வர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டில் பதவி உயர்வு வழங்கப்பட்டபோது ஒரு மாதத்தில் பணியில் இருந்து ஓய்வு பெறக் கூடியவர்களாக இருந்தவர்களுக்கும் பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.  

அரசின் இந்த பாரபட்சமான நடவடிக்கை எதிர்காலத்தில் கல்லூரி முதல்வர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் பெரிய அளவிலான சிக்கலை ஏற்படுத்தும் என்று அரசுக் கல்லூரி முதல்வர்கள் அஞ்சுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.