திருநெல்வேலி : தூத்துக்குடி மாவட்டம், ஆதிநாதபுரத்தில் கட்டப்பட்டு வரும் சமத்துவபுர வீடுகள் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை விலை பேசப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், வீடுகளை கட்டும் முன்பு பயனாளிகள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறை மீறப்பட்டுள்ளதால் வீடுகளின் தரத்தை கண்காணிப்பார் யாரும் இல்லாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நிகழ் நிதியாண்டில் 36 சமத்துவபுரங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில் ஒரு சமத்துவபுரமாக தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஒன்றியம் ஆதிநாதபுரம் ஊராட்சியில் 100 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஆதிநாதபுரத்தில் உள்ள மாட்டுத்தாவணியில் 9.96 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்த சமத்துவபுரத்தின் கட்டுமான பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. வீடுகள் அனைத்தும் ஓராண்டு காலத்தில் கட்டி முடிக்கப்பட வேண்டும் என காலநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு 2011 மார்ச் மாதத்துக்கு முன்னதாகவே பணிகளை முடித்து திறப்பு விழாவை நடத்திவிட வேண்டும் என ஆளுங்கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இப்போது, சமத்துவபுரத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் முன்பே விலை பேசப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. வீடுகளின் கட்டுமானப் பணிகள் 40 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படவில்லை என்பதை திட்டத்தை செயல்படுத்தும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையினர் உறுதி செய்கின்றனர். இதனால் யாருக்கு எந்த வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என தெரியாது. வீடுகளின் கட்டுமானமும் தரம் குறைந்ததாக இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. தரம் குறைந்த மணல், செங்கல் ஆகியவற்றோடு குறைந்த அளவு சிமென்ட் பயன்படுத்தப்பட்டு வருவதால் ஒரு சில ஆண்டுகளிலேயே வீடுகள் பழுதடையும் நிலை இருப்பதாக உள்ளூர் நபர்கள் கூறுகின்றனர்.
இந்த வீடுகளை கட்டும் பணிக்கான ஒப்பந்தக்காரர் ஆளும் கட்சி பிரமுகரின் மகன் என்று தெரிய வருகிறது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலர் அருகில் உள்ள கிராம மக்களை அணுகி |50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையில் விலை பேசி பண வசூலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வீடு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த அண்டை கிராம ஏழை மக்கள் இனிமேல் வீடு கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற விரக்தி அடைந்துள்ளனர்.
எனவே, வீடுகள் விலை பேசப்படுவதை தடுத்து, தரமான முறையில் வீடுகளைக் கட்டி தகுதியான நபர்களுக்கு ஒதுக்கீடு செய்து திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


