தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

அரியலூர் புறவழிச் சாலையில் ரயில்வே மேம்பாலப் பணிகள் விரைவுப்படுத்தப்படுமா?

அரியலூர்: அரியலூரில் புறவழிச்சாலைப் பணிகள் 90 சதம் நிறைவடைந்துள்ள போதிலும், ரயில்வே பாதையில் மேம்பால கட்டுமானப் பணிகளில் தாமதம் ஏற்பட்டிருப்பதால், புறவழிச்சாலை அமைத்தும் பயனில்லாத நிலைதான் காணப்படுவதா

News image
Updated On :27 டிசம்பர் 2023, 6:31 pm

கு. வைத்திலிங்கம்

அரியலூர்: அரியலூரில் புறவழிச்சாலைப் பணிகள் 90 சதம் நிறைவடைந்துள்ள போதிலும், ரயில்வே பாதையில் மேம்பால கட்டுமானப் பணிகளில் தாமதம் ஏற்பட்டிருப்பதால், புறவழிச்சாலை அமைத்தும் பயனில்லாத நிலைதான் காணப்படுவதாக இந்தப் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அரியலூர் நகரைச் சுற்றி அரசு சிமென்ட் ஆலை ஒன்றும், 6 தனியார் சிமென்ட் ஆலைகளும் உள்ளன.  இந்த ஆலைகளில் நாள் ஒன்றுக்கு குறைந்தது 30,000 டன்னுக்கு மேல் சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாளொன்றுக்கு இந்த ஆலைகள் மூலம் குறைந்தது 8 லட்சம் சிமென்ட் மூட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

சிமென்ட் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருள்களை பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரவும், உற்பத்தி செய்யப்பட்ட சிமென்ட் மூட்டைகளை வெளியிடங்களுக்கு கொண்டு செல்லவும், இதுதொடர்பான பல்வேறு பணிகளில் சராசரியாக நாள்தோறும் குறைந்தது 1000-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களும், இதனைச் சுற்றியுள்ள கிராமச் சாலைகளில் குறைந்தது 500 லாரிகளும் பயணிக்கின்றன. கனரக வாகனங்கள் செல்வதால் அந்தச் சாலைகள் மிகவும் சேதம் அடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளன.

 எனவே, இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 11 மாவட்டங்களை இணைக்கும் வகையில், திருவண்ணாமலையிலிருந்து நாகப்பட்டினம் வரையிலான 750 கி.மீ. சாலையை | 2160 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கு திட்டம் வகுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

 இதில் அரியலூர், ஜெயங்கொண்டம், அணைக்கரை, விருத்தாசலம் வரையிலான சாலைகளை அகலப்படுத்தும் பணியின்போது, அரியலூர் நகரில் புறவழிச்சாலை அமைப்பதற்கும் திட்டம் வகுக்கப்பட்டது.

 அரியலூர் புறவழிச்சாலை அமைக்க 27 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, உலகத்தரத்தில் சாலைகள் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, புறவழிச்சாலை பணிகள் கடந்த 2006 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. இப்போது 90 சதப் பணிகள் முடிவடைந்துள்ளன.

இந்நிலையில், இந்த புறவழிச் சாலைப் பணியில் அல்லி நகரத்திலிருந்து எருத்துக்காரன்பட்டி சாலைக்கு நடுவில் ரயில்வே மேம்பாலப் பணிகள் முடிக்கப்படாததால், புறவழிச்சாலை அமைத்தும் பயன் இல்லாத நிலைதான் இங்கு காணப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், மத்திய ரயில்வே துறை இணை அமைச்சராக இருந்த ஆர். வேலு அரியலூருக்கு வந்த போது, ரயில்வே மேம்பால கட்டுமானப் பணியின் தொய்வு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ரயில்வே கட்டுமானப் பிரிவுதான் இந்த பணிகளை மேற்கொள்ளும், பணிகள் விரைவுப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

ஆனால், அமைச்சர் பதில் கூறிச் சென்று 6 மாதங்கள் கழித்துதான் பாலத்தின் தாங்குத் தூண்கள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.  இப்போது பாலத்தின் இணைப்புக் கட்டைகளும் தயாரிக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

 இந்த இணைப்புக் கட்டைகள் குறிப்பிட்ட நாள்களுக்குப் பின்னர் கிரேன் இயந்திரம் மூலம் பாலத்தின் தூண்களின் மேல் தூக்கி வைக்கப்பட்டு, பாலம் இணைக்கப்படும். அதன் பின்னர் நெடுஞ்சாலைத் துறையினரின் சோதனைக்குப் பிறகு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் எனத் தெரிகிறது.

 புறவழிச்சாலை அமைத்தும் ரயில்வே மேம்பாலப் பணிகள் முடிவடையாததால், அரியலூர் நகருக்குள் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. அரசு மருத்துவமனை சாலை, சத்திரம், தேரடி போன்ற பகுதிகளின் வழியாக கனரக வாகனங்கள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சாலைகளும் புழுதி மயமாக காணப்படுகின்றன.

புறவழிச் சாலையில் அனைத்து பணிகளும் நிறைவடைந்தும், ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் உரிய காலத்தில் முடிவடையாதது அனைத்துத் தரப்பினரின் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, உரிய காலத்தில் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகளை முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அரியலூர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.