÷இதையடுத்து, கடந்த ஆண்டு ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 3,500 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு டன் வேலிமர விறகுகள் இந்த ஆண்டு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 5,200 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வேலம், கருவேலம் உள்ளிட்ட மரங்களின் விறகுகள் கடந்த ஆண்டு ஒரு டன் சுமார் ரூ. 2500-லிருந்து ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 3,300 வரை உயர்ந்துள்ளது. இதில், கடந்த 15 நாள்களாக பெய்து வரும் தொடர் மழையால் மட்டும் அனைத்து ரக விறகுகளின் விலையும் டன்னுக்கு ரூ. 1,000 முதல் ரூ. 1,200 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதனால், ஒரு லோடு (சுமார் 12 டன்) விறகுகள் வாங்கும்போது ரூ. 15 ஆயிரம் வரை இழப்பு ஏற்படுவதாக சாய, சலவை உள்ளிட்ட தொழிற்கூட உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.