டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பழைய அரசுப் பேருந்துகள் சீரமைக்கப்படுமா?

பெரம்பலூர்  : தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பெரம்பலூர் கிளை மூலம் இயக்கப்படும் மிக மோசமான நிலையில் உள்ள பழைய பேருந்துகளைச்  சீரமைக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.      பெரம்பலூர் அ

News image
Updated On :27 டிசம்பர் 2023, 6:23 pm

கே.​ தர்மராஜ்

பெரம்பலூர்  : தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பெரம்பலூர் கிளை மூலம் இயக்கப்படும் மிக மோசமான நிலையில் உள்ள பழைய பேருந்துகளைச்  சீரமைக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

     பெரம்பலூர் அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மூலம் 47 நகரப் பேருந்துகளும், கடலூர், சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு 47 பேருந்துகளும், மாற்றுப் பேருந்துகளாக 8 பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

   இதனால், இந்தக் கிளை மூலம்  நாள் ஒன்றுக்கு | 7 லட்சம் முதல் | 8 லட்சம் வரை வருவாய் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

   ஆனால், சென்னைக்கும், கிராமப்புறங்களுக்கும் இயக்கப்படும் அரசுப்  பேருந்துகளில் மாற்று டயர் இல்லாததால், நாள்தோறும் 10-க்கும் அதிகமான பேருந்துகள் டயர் பழுதாகி, சாலையின் நடுவிலேயே நிற்கும் நிலை உள்ளது.

   இதனால், பயணிகள் குறிப்பிட்ட காலத்துக்குள் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்குச் செல்ல முடியாமல், பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

  இதேபோல, டயர் பழுது, என்ஜின் பழுது ஏற்பட்டு காலதாமதமானால், அந்த கிலோ மீட்டரை ஈடு செய்யும் வகையில், குறைந்த அளவிலான பயணிகளை ஏற்றிக்கொண்டு, இரவு நேரங்களில் பேருந்துகளை இயக்க வேண்டும் என  போக்குவத்துக் கழக அதிகாரிகள் கூறுகின்றனராம்.

   இதனால், அரசுப்போக்குவரத்து கழகத்துக்கு இழப்பு ஏற்படுவதோடு, ஓட்டுநர்களும், நடத்துநர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

   மேலும், பணிமனையில் உள்ள பேருந்துகளுக்கு போதிய உதிரி பாகங்கள் இல்லாததால், முறையான பராமரிப்பு இன்றி காணப்படுகின்றன.

  சென்னை உள்ளிட்ட பிரதான வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் மழைக் காலங்களில் ஒழுகுவதால், பயணிகளுக்கும், நடத்துநர்களுக்கும் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்படுகிறது.

   இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் கூறியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஓட்டுநர்கள் கூறுகின்றனர். மேலும், டீசல் சிக்கனம் என்ற காரணத்தைக் காட்டி, 50 கிலோ மீட்டர் வேகத்துக்கு குறைவாகவே அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதால், குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

   இதனால், அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதைவிட, தனியார் பேருந்துகளில் பயணம் செய்வதையே பொதுமக்கள் விரும்புவதாகக் கூறப்படுகிறது.

  மேலும், சாதாரணக் கட்டணத்தில் இயக்கப்படும் கிராமப்புற பேருந்துகள் அனைத்தும், பத்து நாள்களுக்கு ஒரு முறை சிறப்புப் பேருந்துகளாக மாற்றி, அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், விழாக் காலங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    பெரம்பலூர் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களுக்கு போதுமான பேருந்து வசதிகள் இல்லாததால், அவதிப்பட்டு வரும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்டத்தில் முழுமையான அளவில்  பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

   குறிப்பாக, அகரம் சிகூர், அரும்பாவூர், பூலாம்பாடி, கொட்டாரக்குன்னு, விஜயபுரம், பெரியம்மாபாளையம், உடும்பியம் மற்றும் பெரம்பலூர்- ஆத்தூர் வழித்தடங்களில் போதுமான பேருந்து வசதியில்லாததால், அந்த வழித்தடங்களில் இயக்கப்படும் ஒரு சில பேருந்துகளின் மேற்கூரை மற்றும் படிகளில் தொங்கியவாறு பலர் பயணம் செய்து வருகின்றனர்.

   பெரம்பலூரில் இருந்து, கொளக்காநத்தம் வழியாக அரியலூர், லால்குடி, திருச்சி செல்லும் பேருந்துக்கு | 4000 செலவாகிறது. ஆனால், அவற்றில் | 3000 மட்டுமே வசூலாவதாகக் கூறப்படுகிறது.

  இதேபோல, பெரம்பலூரில் இருந்து கனவாய் செல்லும் பேருந்திலும் குறைந்தளவு பயணிகள் செல்லும் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

   எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் பழைய பேருந்துகளைச்  சீரமைத்து, பேருந்து வசதியின்றி அவதிப்படும் கிராமப் பகுதிகளுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் உரிய நடவடிக்கை வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.