இதனால், பல தொழிலாளர்கள் ஈஎஸ்ஐ திட்டத்துக்கு வீணாக பணத்தை செலுத்திவிட்டு தனியார் மருத்துவமனையிலேயே சிகிச்சைப் பெறும் அவலநிலை தொடர்கிறது. தொழிலாளர்களின் இப் பாதிப்பை அடுத்து தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து திருப்பூரில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய ஈஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க கடந்த 2003ம் ஆண்டில் அக்கழகம் |10 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. தவிர, அம்மருத்துவமனை கட்டுவதற்கு திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில் நிலம் ஒதுக்கித்தர மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இதுவரை மாநில அரசு ஈஎஸ்ஐ மருத்துவமனை கட்டுவதற்குத் தேவையான இடத்தை ஒதுக்கித் தராததால் அத்திட்டம் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டுள்ளது.