எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

புதிய ஆசிரியர் பயிற்சி மையங்களை அனுமதிக்க மத்திய அரசு எதிர்ப்பு

சென்னை, மே 21: வரும் கல்வியாண்டில் புதிய ஆசிரியர் பயிற்சி மையங்கள் தொடங்க அனுமதி வழங்கக் கூடாது என்று மத்திய அரசு, தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.   இது குறித்து தமிழக அரசு விரைவில் மத்திய அரசுக

News image
Updated On :25 டிசம்பர் 2023, 2:02 pm

ஆர். ஆதித்தன்

சென்னை, மே 21: வரும் கல்வியாண்டில் புதிய ஆசிரியர் பயிற்சி மையங்கள் தொடங்க அனுமதி வழங்கக் கூடாது என்று மத்திய அரசு, தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

  இது குறித்து தமிழக அரசு விரைவில் மத்திய அரசுக்கு பதில் அளிக்க உள்ளது.

  தமிழகத்தில் மொத்தம் 666 ஆசிரியர் கல்வி பயிற்சி மையங்கள் உள்ளன. இதில் 26-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி மையங்கள் அரசுடையது. ஓராண்டுக்கு சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் படித்து வெளிவருகின்றனர்.

1.5 லட்சம் பேர் கதி?   "தற்போதைய நிலவரப்படி சுமார் 1.5 லட்சம் பேர் ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வேலைக்காகக் காத்திருக்கின்றனர். இதில் ஆண்டொன்றுக்கு 50 ஆயிரம் பேர் புதியதாகப் படித்து முடித்துவிட்டு வெளியேறுகின்றனர்.

  ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் ஆண்டொன்றுக்கு சுமார் 6 ஆயிரம் பேர் மட்டுமே வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சீனியாரிட்டி முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இந்த ஆண்டில் புதியதாக 5,773 பேர் தேர்ந்தெடுப்பு:   2009-10-ம் ஆண்டு கல்வியாண்டில் இடைநிலை ஆசிரியர்கள் 5,773 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கிடையில் பயிற்சி முடித்து வேலைக்காகக் காத்திருக்கும் இந்த 1.5 லட்சம் பேருக்கு எப்போது வேலை கிடைக்கும் என்பது தெரியாது. அதேநேரத்தில் அரசு வேலை கிடைக்க வேண்டுமெனில், அதற்கு 20 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது' என்று ஆசிரியர் பயிற்சி மைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு கடிதம்:   அதேநேரத்தில் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பி உள்ளது. அதில் வரும் கல்வியாண்டில் புதிய ஆசிரியர் பயிற்சி மையங்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று கூறியுள்ளது. மத்திய அரசின் இந்தக் கோரிக்கையை கேரளம் உள்ளிட்ட சில மாநிலங்கள் ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. அதனால் தமிழகத்தில் இந்த ஆண்டில் புதிய ஆசிரியர் பயிற்சி மையங்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றே தெரிகிறது. இருந்தாலும் இதுபற்றி மாநில அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று அத்துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பிசுபிசுக்கும் விண்ணப்ப விற்பனை:    வரும் கல்வியாண்டிற்கான ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்புக்கான விண்ணப்பங்கள் மே 20-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஜூன் 3-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக 70 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

  இதுவரை மாநிலம் முழுவதும் குறைந்த அளவிலே விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன. சேலத்தில் வெறும் 50 விண்ணப்பங்கள் தான் விற்பனை ஆகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  விண்ணப்பங்கள் குறைந்த அளவிலேயே விற்பனை ஆகியுள்ளதால், இந்தக் கல்வியாண்டில் மாணவர்கள் ஆசிரியர் பயிற்சி மையங்களில் சேர ஆர்வம் காட்டவில்லை என்பது தெரிகிறது.

மூடு விழா காணுமா?   இதனால் வரும் காலங்களில் தமிழகத்தில் பெருமளவிலான ஆசிரியர் பயிற்சி மையங்களில் மாணவர் சேர்க்கை குறைந்துவிடும். மாணவர் சேர்க்கை குறைந்து வரும் நிலையில், படிப்படியாக ஆசிரியர் பயிற்சி மையங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்படலாம் என்று கல்வித்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.