தஞ்சாவூர், ஜூன் 10: ஜூன் 12-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மேட்டூர் அணை திறக்க வாய்ப்பில்லாத சூழலில், சம்பா சாகுபடிக்காவது காவிரி நீரை தமிழக அரசு பெற்றுத் தருமா என்ற கேள்வி காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
காவிரி நடுவர் மன்றம் 16 ஆண்டுகள் விசாரணை நடத்தி, 2007, பிப்ரவரி 5-ம் தேதி, கர்நாடக அரசு காவிரியில் 192 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டுமென்று இறுதித் தீர்ப்பு வழங்கியது.
உச்ச நீதிமன்றத்துக்கு இணையான காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை பல ஆண்டுகளாக புறந்தள்ளி தன்னிச்சையான போக்கை கடைப்பிடித்து வந்த கர்நாடகம், இறுதித் தீர்ப்புக்கு பின்பும் பழைய போக்கையே கடைப்பிடிக்கிறது.
தமிழகத்தில் டெல்டா பாசனத்துக்கு ஆண்டுதோறும் மேட்டூர் அணை ஜூன்-12 ம் தேதி திறக்கப்பட வேண்டும். அணையில் தற்போது நீர்மட்டம் 60 அடி. நீர் இருப்பு 23 டிஎம்சி மட்டுமே. 90 அடிக்கு மேல், 40 டிஎம்சி அளவு நீர் இருந்தால் மட்டுமே அணையை பாசனத்துக்காக திறக்க முடியும்.
அணையில் நீர் பற்றாக்குறையாக இருப்பதால் ஜூன் 12-ம் தேதி அணையைத் திறக்க வாய்ப்பில்லை என்று தமிழக பொதுப் பணித் துறை அமைச்சர் துரைமுருகனும், காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் மோகன கிருஷ்ணனும் ஒரே கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்குப் பருவமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், அங்கு அணைகள் நிரம்பினாலும் உடனடியாகத் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுவிடும் என நம்பிவிட முடியாது. டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் பெற்றுத் தரவேண்டியது தமிழக அரசின் தலையாயக் கடமை.
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்தை வலியுறுத்த, மத்திய அரசை திமுக அரசு வலியுறுத்துமா?. அப்படி வலியுறுத்தினாலும் கர்நாடக பாஜக அரசு ஏற்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
கடந்த முறை திமுகவின் தயவில் மத்தியில் ஆட்சி நடத்திய காங்கிரஸ், திமுகவின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்துக் கொண்டிருந்த சூழலிலும்கூட தமிழகத்துக்கு காவிரி நீரை முழுமையாகப் பெற்றுத் தரவில்லை. இந்த முறை திமுகவின் ஆதரவை முழுமையாக நம்பி ஆட்சி நடத்த வேண்டுமென்ற சூழல் இல்லாத வகையில் மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. திமுக தயவில்லாமல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடத்த முடியுமென்ற சூழலில் திமுக ஏதேனும் ஒரு வழிமுறையைக் கடைப்பிடித்து தமிழகத்துக்கு தண்ணீர் பெற்றுத் தர வேண்டும்.
தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் ஜூன் 17-ம் தேதி தொடங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில், டெல்டா பாசன விவசாயிகள் சார்பில் பாசனத்துக்கு தண்ணீர் கேட்டு போராட்டங்கள் நடைபெறலாம். மேலும் எதிர்க்கட்சிகளும் காவிரிப் பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் குரலெழுப்ப வாய்ப்புள்ளது.
தற்போது பெய்து வரும் தென்மேற்குப் பருவமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு வரும் தண்ணீரில் குறிப்பிட்ட சதவீதத்தை தமிழகத்துக்குத் திறந்துவிட கர்நாடக மாநில அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்த வேண்டும்.
இறுதித் தீர்ப்பு குறித்து இரு மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளதால், இடைக்காலத் தீர்ப்புப்படி ஜூன் மாதம் 10.16 டிஎம்சி, ஜூலை மாதம் 42.76 டிஎம்சி நீரைப் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குறுவை சாகுபடி கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், தமிழக அரசு தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தை உடனடியாக அணுகி, ஒரு போக சம்பா சாகுபடியையாவது உறுதி செய்ய வேண்டுமென்பதே காவிரி டெல்டா விவசாயிகளின் எதிர்பார்ப்பு.
தேய்கிறது உரிமை...
காவிரியை நம்பியுள்ள தமிழக விவசாயிகளின் எண்ணிக்கை கர்நாடக விவசாயிகளைவிட அதிகம். ஆனால், தண்ணீரின் அளவு மட்டும் குறைந்து கொண்டே வருகிறது.
1924-ம் ஆண்டில் 575 டிஎம்சி ஆக இருந்த தமிழகத்தின் தேவை, அவசர நிலைக் காலத்தில் 389 டிஎம்சியாக குறைந்தது.
1990-ல் குறைந்தது 250 டிஎம்சியாவது கொடுங்கள் என்கிற நிலைக்கு மாறி, 1991-ல் இடைக்காலத் தீர்ப்பில் 205 டிஎம்சி எனக் குறைந்து, இறுதித் தீர்ப்பில் 192 டிஎம்சியாக மேலும் குறைந்துவிட்டது.
தமிழகத்துக்கு கர்நாடகம் திறந்துவிடும் தண்ணீரின் அளவு குறைந்துக் கொண்டே வருவதோடு, காவிரியில் நமது உரிமை நாளுக்கு நாள் தேய்ந்து வருவதை மீட்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


