நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

டி20 உலகக் கோப்பையில் 50 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர்!

டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் 50 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் படைத்துள்ளார்.

News image
ஷகிப் அல் ஹசன்- படம் | வங்கதேச கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Updated On :23 ஜூன் 2024, 2:05 pm

DIN

டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் 50 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் படைத்துள்ளார்.

இந்திய அணி அதன் சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக விளையாடியது. அந்த போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் வங்கதேச அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஷகிப் அல் ஹசன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றியதன் மூலம், டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் 50 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை ஷகிப் அல் ஹசன் படைத்துள்ளார். இந்தப் பட்டியலில் அவருக்கு அடுத்தபடியாக 39 விக்கெட்டுகளுடன் பாகிஸ்தான் வீரர் ஷகித் அஃப்ரிடி உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.