/

தொடர் தோல்விகளில் இலங்கை அணி! வங்கதேசத்துக்கு முதல் வெற்றி!

டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்கதேசம் அணி.

News image
Updated On :8 ஜூன் 2024, 7:39 am

DIN

டி20 உலகக் கோப்பையின் குரூப் டி பிரிவில் இலங்கை - வங்கதேசம் அணிகள் மோதின. இலங்கை , வங்கதேசம் அணிகளின் போட்டி என்றாலே த்ரில்லர் போல ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். கடந்த சில ஆண்டுகளாக இவ்விரு அணிகள் மோதும் போட்டிகள் சுவர்சியமாக சென்றுள்ளன.

இன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் 15ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 124/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பதும் நிசாங்கா 47 ரன்கள் அடித்தார்.

வங்கதேசம் சார்பில் முஸ்தஃபிசூர், ரிஷாத் ஹொஸைன் தலா 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள்.

அடுத்து விளையாடிய வங்கதேசம் அணி 19 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. அதிகபட்சமாக டௌஹிட் ஹ்ரிதோய் 40, லிட்டன் தாஸ் 36 ரன்களும் எடுத்தார்கள்.

இலங்கை சார்பில் நுவான் துசாரா 4 விக்கெட்டுகள் வனிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகள் எடுத்தும் பயனில்லாமல் ஆட்டம் தோல்வியில் முடிந்தது.

Story image

தொடர்சியாக 2 போட்டிகளில் இலங்கை அணி தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 2 போட்டிகளில் வென்றாலும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுவது சற்று கடினமாகவிருக்கும். நெட் ரன் ரேட் முக்கிய பங்கு வகிக்கும்.

தற்போது இலங்கை அணி ஒரு வெற்றிக்கூட பெறாமல் எதிர்மறையாக -0.777 புள்ளிகளில் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.