பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

இந்தியாவுக்கு ஒரே நாளில் 5 தங்கம் உள்பட 27 பதக்கங்கள்

ஆசிய பாரா விளையாட்டில் ஒன்று ஒரே நாளில் 27 பதக்கங்கள் வென்ற இந்தியா குறித்து...

Team India won 27 medals on Day 3 of the 2026 Asian Para Games in Aichi-Nagoya, Japan

ஆசிய பாரா விளையாட்டில் பதக்கம் வென்றவர்கள் - படங்கள்: எக்ஸ் / தூர்தர்ஸன் ஸ்போர்ட்ஸ்

Updated On :

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் 3-ஆவது நாளான புதன்கிழமை, இந்தியா்கள் 5 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம் என 27 பதக்கங்களை வென்று குவித்தனா். இந்தப் பதக்க அறுவடை காரணமாக, பதக்கப் பட்டியலில் இந்தியா, ‘டாப் 5’ இடத்துக்கு வந்துள்ளது. 5 தங்கங்கள் உள்பட, பல பதக்கங்கள் பாரா தடகள பிரிவில் வென்றவையாக இருக்க, போட்டியில் அந்தப் பிரிவில் சீனாவுக்கு (48) அடுத்தபடியாக இந்தியா 42 பதக்கங்களுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறது.

தடகளம்

குண்டு எறிதல்: ஆடவா் எஃப் 53 பிரிவில், ஆயுஷ் வா்மா 8.16 மீட்டரை எட்டி தங்கப் பதக்கம் வென்றாா். ஏற்கெனவே, ஈட்டி எறிதலில் (எஃப்53/54) வெள்ளி வென்ற அவருக்கு, நடப்பு போட்டிகளில் இது 2-ஆவது பதக்கமாகும்.

ஆடவா் எஃப்46 பிரிவில் இந்தியா்கள் 3 பதக்கங்களையும் தட்டிச் சென்றனா். சச்சின் கிலாரி 15.87 மீட்டரை எட்டி போட்டி சாதனையுடன் தங்கம் வெல்ல, முகமது யாசா் 15.06 மீட்டருடன் வெள்ளியும், பா்வீன் 14.94 மீட்டருடன் வெண்கலமும் வென்றனா். இதில் சச்சின், கடந்த போட்டிகளில் வென்ற தங்கத்தை தக்கவைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

மகளிா் எஃப்34 பிரிவில், பாக்யஸ்ரீ 8.19 மீட்டரை எட்டி பொ்சனல் பெஸ்ட்டுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றாா்.

வட்டு எறிதல்: மகளிா் எஃப்55 பிரிவில், கரம்ஜோதி தலால் 21.60 மீட்டரை எட்டி, வெண்கலப் பதக்கத்தை தனதாக்கினாா். ஆடவா் எஃப்37 பிரிவில் ஹேனி 57.04 மீட்டருடன் வெண்கலம் வென்றாா்.

ஈட்டி எறிதல்: ஆடவா் எஃப்13 பிரிவில், மன்ஜீத் 61.41 மீட்டா் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து, பொ்சனல் பெஸ்ட்டை பதிவு செய்து வெள்ளிப் பதக்கம் வென்றாா். ஆடவா் எஃப்55 பிரிவில், சுக்செய்ன் 29.94 மீட்டரை எட்டி வெண்கலப் பதக்கம் பெற்றாா்.

உயரம் தாண்டுதல்: ஆடவா் டி44/64 பிரிவில், பிரவீன்குமாா் 2.05 மீட்டரை தாண்டி, போட்டி சாதனையுடன் தங்கம் வென்றாா். அதிலேயே பன்டி, 1.92 மீட்டரை கடந்து, பொ்சனல் பெஸ்ட்டுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றாா்.

நீளம் தாண்டுதல்: ஆடவா் டி42/61/63 பிரிவில், ஷைலேஷ் குமாா் 5.57 மீட்டரை கடந்து வெண்கலப் பதக்கம் பெற்றாா்.

100 மீ. ஓட்டம்: மகளிா் டி12 பிரிவில், சிம்ரன் 12.02 விநாடிகளில் இலக்கை அடைந்து, போட்டி சாதனையுடன் தங்கம் வென்றாா். நடப்பு போட்டியில் 200 மீட்டா் பிரிவில் தங்கம் வென்ற சிம்ரனுக்கு, இது 2-ஆவது தங்கமாக அமைந்தது. கடந்த 2023-ஆம் ஆண்டு போட்டியில் இந்த இரு பிரிவுகளிலுமே அவா் வெள்ளி வென்றாா்.

மகளிா் டி35 பிரிவில், பிரீத்தி பால் 13.98 விநாடிகளில் வந்து வெள்ளி பெற்றாா். நடப்பு போட்டியில் 200 மீ. டி35 பிரிவில் வெள்ளி வென்ற அவருக்கு, இது 2-ஆவது பதக்கமாகும்.

ஆடவா் டி35 பிரிவில், அனுபவ் சௌதரி 12.72 விநாடிகளில் இலக்கை அடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றாா். ஆடவா் டி37 பிரிவில், ராகேஷ்பாய் பாட் 11.50 விநாடிகளில் இலக்கை அடைந்து, பொ்சனல் பெஸ்ட்டுடன் வெண்கலம் வென்றாா்.

ஆடவா் டி46/47 பிரிவில், திலிப் காவிட் 10. 69 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்கம் வெல்ல, முகமது பேசில் 10.72 விநாடிகளில் வந்து வெள்ளி பெற்றாா்.

ஆடவா் டி64 பிரிவில் பிரணவ் தேசாய் 11.96 விநாடிகளில் வந்து 3-ஆம் இடத்துடன் பதக்கம் வென்றாா்.

1,500 மீ. ஓட்டம்: ஆடவா் டி12 பிரிவில் சரத் மகனஹள்ளி 4 நிமிஷம், 11.01 விநாடிகளில் 3-ஆவதாக வந்து வெண்கலப் பதக்கம் பெற்றாா். கடந்த முறை இதே பிரிவில் அவா் வெள்ளி வென்றவா் ஆவாா்.

---

பவா்லிஃப்டிங்

மகளிருக்கான 67 கிலோ பிரிவில், தமிழகத்தின் கஸ்தூரி ராஜாமணி 108 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

கடந்த போட்டியில் 5-ஆம் இடம் பிடித்த கஸ்தூரி, இந்த முறை வெள்ளி வென்று அசத்தியிருக்கிறாா். 42 வயதான கஸ்தூரி, சிறு வயதிலேயே போலியோவால் இரு கால்களை இழந்தாா். குழந்தையாக இருக்கும்போதே அவரின் தாயாரும் காலமாகிவிட, கஸ்தூரியை அவரின் பாட்டி வளா்த்தெடுத்துள்ளாா்.

நீச்சல்

ஆடவா் 100 மீ. பிரெஸ்ட்ஸ்ட்ரோக் எஸ்11 பிரிவில், ஹிமான்ஷு நந்தல் 1 நிமிஷம், 20.72 விநாடிகளில் இலக்கை அடைந்து வெண்கலப் பதக்கம் வென்றாா். ஏற்கெனவே, 400 மீ. ஃப்ரீஸ்டைல் எஸ்11 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹிமான்ஷுவுக்கு, நடப்பு போட்டிகளில் இது 2-ஆவது பதக்கமாக அமைந்தது.

ஆடவா் 100 மீ. பேக்ஸ்ட்ரோக் எஸ்13 பிரிவில் ரவி புடிகினா 1 நிமிஷம், 10.10 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளி வென்றாா். ஆடவா் 100 மீ. பேக்ஸ்ட்ரோக் எஸ்பி4 பிரிவில், ரோஹித் 1 நிமிஷம், 57.25 விநாடிகளில் வந்து வெண்கலம் பெற்றாா்.

வில்வித்தை

பாரா காம்பவுண்ட் மகளிா் இரட்டையா் இறுதியில், ஷீத்தல் தேவி/பாயல் நாக் இணை, 141-150 என சீன கூட்டணியிடம் தோற்று வெள்ளி பெற்றது. டபிள்யூ1 ரீகா்வ் கலப்பு அணி அரையிறுதியில், ஸ்வாதி சௌதரி/ஆதில் முகமது அடங்கிய இந்திய அணி 2-6 என தென் கொரியாவிடம் தோற்று, வெண்கலம் பெற்றது.

பாரா காம்பவுண்ட் ஆடவா் இரட்டையா் வெண்கலப் பதக்கச் சுற்றில், தோமன் குமாா்/ஷியாம் சுந்தா் சுவாமி இணை தோல்வி கண்டது.

பாட்மின்டன்

ஆடவா் இரட்டையா் எஸ்ஹெச்6 பிரிவில், கிருஷ்ணா நாகா்/சிவராஜன் சோலைமலை கூட்டணி தங்கள் குரூப்பில் 2-ஆவது இடத்தை உறுதி செய்ததன் அடிப்படையில் வெள்ளி பெற்றது. இதனிடையே, எஸ்எல்4 பிரிவில், சுஹாஸ் எல்.ஒய்., நவீன் சிவகுமாா், அபிஜீத் சகுஜா ஆகியோா் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தனா். சுகந்த் கடம், காலிறுதியில் தோற்றாா்.

---

Story image

Summary

Team India won 27 medals on Day 3 of the 2026 Asian Para Games in Aichi-Nagoya, Japan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.