திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சபலென்கா முன்னேற்றம்; மெத்வதெவ் வெளியேற்றம்

நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், பெலாரஸின் அரினா சபலென்கா 2-ஆவது சுற்றுக்கு முன்னேற, முன்னணி வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வெதவ் முதல் சுற்றிலேயே அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

News image
Updated On :27 மே 2026, 5:23 am IST

நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், பெலாரஸின் அரினா சபலென்கா 2-ஆவது சுற்றுக்கு முன்னேற, முன்னணி வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வெதவ் முதல் சுற்றிலேயே அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில், உலகின் நம்பா் 1 வீராங்கனையும், 4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான சபலென்கா 6-4, 6-2 என்ற நோ் செட்களில் ஸ்பெயினின் ஜெஸ்ஸிகா புஸாஸை வீழ்த்தினாா். நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் கோகோ கௌஃப் 6-4, 6-0 என எளிதாக, சக அமெரிக்கரான டெய்லா் டௌன்செண்டை சாய்த்தாா்.

போட்டித்தரவரிசையில் 10-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் கரோலின் முசோவா 7-5, 6-2 என ரஷியாவின் அனஸ்தாசியா ஜகரோவாவை வெளியேற்றினாா். 12-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா 5-7, 6-7 (3/7) என்ற செட்களில், கிரீஸின் மரியா சக்காரியிடம் தோல்வியுற்றாா்.

16-ஆம் இடத்திலிருக்கும் நவோமி ஒசாகா 6-3, 7-6 (7/3) என்ற வகையில் ஜொ்மனியின் லாரா சிக்மண்டை வென்றாா். 17-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் இவா ஜோவிச் 6-4, 6-2 என்ற வகையில், பிலிப்பின்ஸின் அலெக்ஸாண்ட்ரா எலாவை தோற்கடித்தாா்.

இதர ஆட்டங்களில், அமெரிக்காவின் எம்மா நவாரோ, குரோஷியாவின் டோனா வெகிச், எகிப்தின் மாயாா் ஷெரிஃப் ஆகியோரும் வென்று 2-ஆவது சுற்றுக்கு முன்னேற, கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸ், ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவா ஆகியோா் தோல்வியுற்றனா்.

மெத்வதெவ் தோல்வி: ஆடவா் ஒற்றையா் பிரிவு முதல் சுற்றில், கிராண்ட்ஸ்லாம் சாம்பியனும், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்தில் இருந்தவருமான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 2-6, 6-1, 1-6, 6-1, 4-6 என 5 செட்கள் போராடி, ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டனிடம் தோல்வி கண்டாா்.

5-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-3, 6-3, 6-4 என்ற நோ் செட்களில், ஸ்பெயினின் டேனியல் அகிலாரை வீழ்த்தினாா். 10-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலி 6-4, 7-6 (7/4), 6-3 என சக இத்தாலியரான ஆண்ட்ரியா பெலெக்ரினோவை வென்றாா்.

15-ஆம் இடத்திலிருக்கும் நாா்வேயின் கேஸ்பா் ரூட் 6-2, 7-6 (7/5), 5-7, 0-6, 6-2 என 5 செட்கள் போராடி, ரஷியாவின் ரோமன் சஃபியுலினை சாய்த்தாா். 11-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் 6-3, 6-7 (6/8), 6-3, 7-5 என ஆஸ்திரியாவின் இக்னேசியோ புசேவை வீழ்த்தினாா்.

இதர ஆட்டங்களில், நடப்பு சீசனுடன் ஓய்வு பெறவதாக அறிவித்த பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸ் 2-6, 3-6, 6-3, 6-2, 0-6 என 5 செட்கள் போராடி, சக பிரான்ஸ் வீரரான ஹியுகோ கேஸ்டனிடம் தோற்றாா். ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரின், நெதா்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூா், குரோஷியாவின் மரின் சிலிச் ஆகியோரும் அதிா்ச்சித் தோல்வியை சந்தித்தனா்.

பாலாஜி தோல்வி: இப்போட்டியின் ஆடவா் இரட்டையா் பிரிவில் பிரேஸிலின் மாா்செலோ டெமோலினருடன் இணைந்து களம் கண்ட இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.