இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சௌதி புரோ லீக்கில் 100ஆவது கோல் அடித்த ரொனால்டோ..! முதல் கோப்பை வெல்வாரா?

சௌதி புரோ லீக்கில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 100ஆவது கோல் குறித்து...

News image

கோல் அடித்த மகிழ்ச்சியில் ரொனால்டோ. - படம்: எக்ஸ் / கிறிஸ்டியானோ ரொனால்டோ.

Updated On :8 மே 2026, 5:47 pm IST

சௌதி புரோ லீக்கில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 100ஆவது கோல் அடித்து அசத்தியுள்ளார். மொத்தமாக 971 கோல்கள் அடித்துள்ளார்.

போர்ச்சுகலைச் சேர்ந்த ரொனால்டோ (41 வயது) 2023 முதல் சௌதி லீக்கில் அல் - நாசர் கிளப்பில் விளையாடி வருகிறார். முன்னதாக ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் யுனைடெட் அணிகளில் விளையாடியிருந்தார்.

சௌதி லீக்கில் அல் - ஷபாத் அணியுடனான போட்டியில் அல் - நாசர் அணி 4-2 என வென்றது. இதில் ரொனால்டோ 75ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். ஜாவோ பெலிக்ஸ்3, 10, 90+8ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து மிரட்டினார்.

இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை அல் - நாசர் அணி தக்கவைத்துள்ளது. ரொனால்டோ தனது முதல் கோப்பையை இந்த அணியில் பெற ஆயுத்தமாகி வருகிறார்.

அல்- நாசர் அணிக்காக இதுவரை மொத்தமாக 105 போட்டிகளில் விளையாடியுள்ள ரொனால்டோ 100 கோல்கள் அடித்துள்ளார். ரொனால்டோ விரைவில் 1000 கோல்கள் அடித்து வரலாறு படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Cristiano Ronaldo scores his 100th Saudi Pro League goal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.