மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரஃபீனியா ஹாட்ரிக் கோல்..! புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்த பார்சிலோனா!

பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் ரஃபீனியா ஹாட்ரிக் கோல் அடித்தது குறித்து...

News image

கோல் அடித்த மகிழ்ச்சியில் ரஃபீனியா. - படம்: ஏபி

Updated On :16 மார்ச் 2026, 8:47 am

லா லிகா கால்பந்துத் தொடரில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் ரஃபீனியா ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

செவில்லா அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் விளையாடிய பார்சிலோனா அணி 5-2 என அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக பார்சிலோனா அணி தனது முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

நேற்றிரவு நடந்த இந்தப் போட்டியில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் ரஃபீனியா பெனால்டியில் (9’, 21’) இரண்டு கோல்கள், 51ஆவது நிமிஷத்தில் ஒன்றுமாக மொத்தம் மூன்று கோல்களை அடித்து அசத்தினார்.

இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப் பட்டியலில், பார்சிலோனா அணி 70 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. 4 புள்ளிகள் வித்தியாசத்தில் ரியல் மாட்ரிட் அணி இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது.

இந்தப் போட்டியில் லாமின் யமால், ஃபெர்மின் லோபஸுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் கவி சப்ஸ்டியூட்டாக களம்கண்டார். காயம் காரணமாக பல வாரங்கள் விளையாடமல் இருந்த கவிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

லா லிகா புள்ளிப் பட்டியல்

1. பார்சிலோனா - 70 புள்ளிகள்

2. ரியல் மாட்ரிட் - 66 புள்ளிகள்

3. அத்லெடிகோ மாட்ரிட் - 57 புள்ளிகள்

4. வில்லாரியல் - 55 புள்ளிகள்

5. ரியல் பெட்டிஸ் - 44 புள்ளிகள்

6. செல்டா விகோ - 41 புள்ளிகள்

Summary

Raphinha hat-trick fires Barcelona past Sevilla to stay top in La liga points table.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.