ஆர்ஜென்டீன கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி முன்னாள் பிரேசில் வீரர் பீலேவை விட சிறந்தவர் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பையை வென்ற லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மியாமி அணியை அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து கௌரம் செய்தார்.
இந்த நிகழ்வில் டிரம்ப் பேசியிருப்பதாவது:
இதுவரை எந்த ஓர் அமெரிக்க அதிபருக்கும் கிடைக்காத ஒரு தனித்துவமான வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது: ‘வெள்ளை மாளிகைக்கு வருக, லியோனல் மெஸ்ஸி’.
இன்று எனது மகன் என்னிடம் யார் வருகிறார் என்று தெரியுமா கேட்டான்? எனக்கு நிறைய வேலை இருப்பதால் தெரியவில்லை என்றேன். அவன், ‘மெஸ்ஸி’ எனக் கூறினான். அவன் கால்பந்தின் மிகப்பெரிய ரசிகன். உங்களது தீவிரமான ரசிகன்.
ரொனால்டோவும் சிறந்த வீரர். நீங்களும் சிறந்தவர். யார் சிறந்தவர் மெஸ்ஸியா அல்லது பீலேவா? (அருகில் இருப்பவர்களிடம் கேட்டார்). பீலேவை விட மெஸ்ஸி சிறந்தவர்.
இந்தக் கொண்டாட்டத்தில் லியோனல் மெஸ்ஸி அதிபர் டிரம்ப்பிற்கு பிங்க் (இளஞ்சிவப்பு) நிற கால்பந்தினை பரிசாக அளித்தார்.
இளஞ்சிவப்பு நிறம் இன்டர் மியாமி அணியின் வண்ணமாக இருக்கிறது. மேலும், டிரம்ப்பிற்கு எண் 47 கொண்ட ஜெர்ஸியை பரிசாக அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மெஸ்ஸியைப் புகழ்ந்து பேசிய டிரம்ப் தனது மகனும் தீவிர ரசிகன் என்று இங்கு வர அடம்பிடித்ததாகவும் வேலை அதிகமாக இருப்பதால் வேண்டாம் எனவும் தான் மறுத்துவிட்டதாகவும் கூறினார்.
Summary
You may be better than Pele: Donald Trump tells Lionel Messi at White House event, mentions Cristiano Ronaldo.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிடிவாதம் தளர வேண்டும்!

மெஸ்ஸி 2 கோல்கள்: இன்டர் மியாமி புள்ளிப் பட்டியலில் 2ஆம் இடத்துக்கு முன்னேற்றம்!
இஸ்ரேல்தான் அமெரிக்காவின் சிறந்த கூட்டாளி: டிரம்ப்

அதிவேகமாக 900 கோல்கள்..! மெஸ்ஸி உலக சாதனை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


