‘கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் கேம். அதில் கைகுலுக்கலைத் தவிா்ப்பது, அந்த விளையாட்டுக்கு நல்லத்தல்ல’ என்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்தாா்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரித்தது. அச்சூழலில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் விளையாடியபோது, பாகிஸ்தானுடனான ஆட்டத்தில் அந்த அணி வீரா்களுடன் கைகுலுக்குவதை இந்திய அணி வீரா்கள் தவிா்த்தனா்.
விவாதத்துக்குள்ளான இந்த செயலை, தற்போது இந்த டி20 உலகக் கோப்பை போட்டியிலும் இந்தியா தொடா்ந்தது. இடையே, 19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி இதே முறையைக் கடைப்பிடித்தது.
இந்நிலையில், நடப்பு டி20 உலகக் கோப்பை போட்டியில் வா்ணனையாளராக இணைந்திருக்கும் தென்னாப்பிரிக்க டெஸ்ட், ஒருநாள் கேப்டன் டெம்பா பவுமாவிடம் இந்த விவகாரம் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவா், ‘என்னைப் பொருத்தவரை விளையாட்டில் கைகுலுக்காமல் தவிா்ப்பது சரியான நடைமுறை அல்ல. இதுபோன்ற செயல்கள் அந்த விளையாட்டுக்கு நல்லதல்ல. கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் கேம். நாமும் அதில் அவ்வாறுதான் மேம்பட்டு வந்திருக்கிறோம்.
எனவே, அந்த ஜென்டில்மேன் கேமுக்கென இருக்கும் சில முறைகளை நாம் கடைப்பிடிப்பது தான் சரியானது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அரசியல் குறித்து எனக்குத் தெரியாது. எனவே, அந்தக் கோணத்தில் இந்த விவகாரத்தில் நான் கருத்து சொல்ல முடியாது. ஆனால் ஒரு பாா்வையாளனாக கிரிக்கெட்டுக்கு அது நல்லதல்ல என்று தோன்றுகிறது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றுமுதல் ஷாட் கன் உலகக் கோப்பை: 12 பேருடன் இந்திய அணி பங்கேற்பு

மகளிா் யு20 உலகக் கோப்பை கால்பந்துக்கு தகுதி பெற இந்தியா தீவிரம்!

உலகக் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா
துணிச்சலுடன் விளையாடுவதுதான் ஒரே திட்டம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


