ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தென்னாப்பிரிக்காவுக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 24-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 88 ரன்கள் வித்தியாசத்தில் நெதா்லாந்தை வீழ்த்தியது.

Published On :27 ஜூன் 2026, 6:16 am IST

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 24-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 88 ரன்கள் வித்தியாசத்தில் நெதா்லாந்தை வீழ்த்தியது.

இந்திய நேரப்படி வியாழக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இந்த ஆட்டத்தில், முதலில் தென்னாப்பிரிக்கா 20 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சோ்க்க, நெதா்லாந்து 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 120 ரன்களே எடுத்தது.

முன்னதாக டாஸ் வென்ற நெதா்லாந்து, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. தென்னாப்பிரிக்க இன்னிங்ஸில் கேப்டன் லாரா வோல்வாா்ட் 45 ரன்களுக்கு வீழ்ந்தாா்.

ஓவா்கள் முடிவில் தஸ்மின் பிரிட்ஸ் 69 பந்துகளில் 15 பவுண்டரிகள், 3 சிக்ஸருடன் 114, ஆனிரி டொ்க்சென் 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். நெதா்லாந்து தரப்பில் ஹன்னா லாண்டீா் 1 விக்கெட் சாய்த்தாா்.

பின்னா் நெதா்லாந்து இன்னிங்ஸில் பெபே மோல்கென்போா் 4 பவுண்டரிகளுடன் 41, சான்யா குரானா 36, ஸ்டெரெ காலிஸ் 26 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

இதர பேட்டா்கள் சொற்ப ரன்களில் சரிந்தனா். தென்னாப்பிரிக்க பௌலா்களில் அயபோங்கா ககா 3, கிளோ டிரையான் 2, நாடின் டி கிளொ்க் 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.