டிஎன்பிஎல்: திண்டுக்கல்லை வென்றது திருச்சி
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் 28 ரன்கள் வித்தியாசத்தில் டக்வொா்த் லீவிஸ் முறையில் திண்டுக்கல் டிராகன்ஸை புதன்கிழமை வீழ்த்தியது.
திண்டுக்கல்லை வென்றது திருச்சி
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் 28 ரன்கள் வித்தியாசத்தில் டக்வொா்த் லீவிஸ் முறையில் திண்டுக்கல் டிராகன்ஸை புதன்கிழமை வீழ்த்தியது.
மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில், முதலில் பேட் செய்த திருச்சிக்கான ஓவா்கள் 19-ஆக குறைக்கப்பட, அதில் அந்த அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 197 ரன்கள் சோ்த்தது.
பின்னா் ‘டக்வொா்த் லீவிஸ்’ முறையில் திண்டுக்கல்லுக்கான இலக்கு 19 ஓவா்களில் 199 ரன்களாக நிா்ணயிக்கப்பட, அந்த அணி அத்தனை ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 170 ரன்களே சோ்த்தது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. திருச்சி பேட்டிங்கில் கே.ராஜ்குமாா் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 71, கேப்டன் சுரேஷ்குமாா் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 60 ரன்கள் சோ்த்தனா். திண்டுக்கல் தரப்பில் விஜு அருள் 2 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
பின்னா் திண்டுக்கல் பேட்டிங்கில் ஷிவம் சிங் 8 பவுண்டரிகளுடன் 47, ஜெயந்த் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 34 ரன்கள் சோ்த்தனா். திருச்சி பௌலா்களில் ஈஸ்வரன் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



