அமெரிக்காவில் பிலடெல்பியா கால்பந்து திடலில் நடைபெற்ற பிரான்ஸ் - இராக் இடையேயான போட்டி மோசமான வானிலை நிகழ்வினால் 2 மணி நேரம் தாமதமாகியது.
இந்தப் போட்டியில் முதல் பாதியில் பிரான்ஸ் 1-0 என முன்னிலை வகித்தது. இதில் கிளியன் எம்பாபே 14ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார்.
முதல்பாதிக்குப் பிறகு காற்று, மழை, இடி அதிகரித்ததால் போட்டி முதலில் 15 நிமிஷங்கள் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் அப்படியே அதிகரித்து அதிகரித்து 2 மணி நேரங்களாக தாமதமாகின.
பிலடெல்பியாவில் சுமார் 6 மணிக்கு அறிவிக்கப்பட்ட இந்த தாமதம் செய்தி 8 மணிவரை தொடர்ந்தது. ஒரு போட்டியின் பாதியில் இவ்வளவு நேரம் தாமதமாகுவது என்பது பல பத்தாண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெற்றது.
மோசமான வானிலை காரணமாக, உலகக் கோப்பையில் 2 மணி நேரத்துக்கும் அதிகமாக தாமதமானது இதுதான் முதல்முறை என்பதும் நடப்பு உலகக் கோப்பையில் இதுதான் முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கால்பந்து ரசிகர்கள் பிரதான நடைபாதை, பால்கனிகளில் தஞ்சம் புகுந்தனர். பின்னர், போட்டி தொடங்கும் முன்பு ரசிகர்கள் சேறும் சகதியுமாக இருந்த இடங்களை ரப்பர் துடைப்பானைக் கொண்டு சுத்தம் செய்தனர்.
ஃபிஃபாவின் விதியின்படி திடலுக்கு 8 மைல் தூரத்தில் மின்னல் தாக்கினால், போட்டியை 30 நிமிஷங்கள் நிறுத்தலாம் எனக் கூறப்படுகிறது. ஒவ்வொரு மின்னலுக்கும் கூடுதலாக நேரங்கள் ஒதுக்கலாம் என நிலையில் 37ஆவது நிமிஷத்தில் மழை வந்தது. பின்னர், முதல் பாதியின் இறுதியில் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
முன்னதாக, 2014 உலகக் கோப்பையில் பிரேசிலில் பேய்மழை பெய்தும் அமெரிக்கா, ஜெர்மனி இடையேயான போட்டி நிறுத்தப்படாமல் நடந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
World Cup sees first weather delay as France-Iraq game in Philadelphia paused for 2 hours
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

4/16: உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய நான்கு அணிகள்!

15 கோல்களைத் தடுத்து, உலகச் சாதனையில் இடம்பிடித்த கோல்கீப்பர்!

கால்பந்து உலகக் கோப்பையில் அதிக கோல்கள்: மீண்டும் முதலிடம் பிடித்த பிரேசில்!

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்கா!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47




