ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

10 பேர் கொண்ட பராகுவேவிடம் தோல்வியுற்று, கண்ணீருடன் உலகக் கோப்பையிலிருந்து வெளியேறிய துருக்கி!

கால்பந்து உலகக் கோப்பையிலிருந்து வெளியேறிய துருக்கி அணி குறித்து...

Turkey's Mert Muldur (18) reacts after their loss in the World Cup Group D soccer match between Turkey and Paraguay in Santa Clara, Calif., near San Francisco, Friday, June 19, 2026. (AP Photo/Eugene Hoshiko)

கண்ணீருடன் துருக்கி வீரர், வெற்றியுடன் பராகுவே, சோகத்தில் துருக்கி வீரர்கள். - படங்கள்: ஏபி

Published On :21 ஜூன் 2026, 2:59 pm IST

பராகுவே அணியிடம் துருக்கி தோல்வியுற்று, கால்பந்து உலகக் கோப்பையிலிருந்து இரண்டாவது அணியாக வெளியேறியது. முதல் அணியாக ஹைதி வெளியேறியது.

இந்த உலகக் கோப்பையில் இருந்து பிரேசில் அணியிடம் ஹைதி அணி 0-3 என தோல்வியுற்று முதல் அணியாக வெளியேறியது. இதனைத் தொடர்ந்து பராகுவே - துருக்கி அணிகள் மோதின.

இந்தப் போட்டியின் 2ஆவது நிமிஷத்திலேயே பராகுவே அணியின் மத்தியாஸ் கலார்சா கோல் அடித்து அசத்தினார். 1-0 என முன்னிலை வகித்தது.

பின்னர், முதல் பாதியின் ஸ்டாப்பேஜ் நேரத்தில் 45+3ஆவது நிமிஷத்தில் பராகுவே அணியின் மிகுவெல் அல்மிரான் வாயிக்கு அருகே கை வைத்து பேசியதால், புதிய விதியின்படி ரெட் கார்டு வழங்கப்பட்டது. இதனால், பராகுவே அணியில் ஒரு வீரர் குறைவாகவே விளையாடினார்கள்.

பின்னர், இரண்டாம் பாதியில் பலமுறை துருக்கி முயற்சித்தும் 10 பேர் கொண்ட பராகுவே அணியிடம் கோல் அடிக்க திணறியது. இறுதியில் 1-0 என பராகுவே அசத்தல் வெற்றி பெற்றது.

துருக்கி அணி முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றது. தற்போது, இரண்டாவது போட்டியின் தோல்வியால் இரண்டாவது அணியாக உலகக் கோப்பையில் இருந்து துருக்கி அணி வெளியேறியது.

அதிகமான ஷாட்டுகளை அடித்தும் கோல் அடிக்காத அணியாக துருக்கி இருக்கிறது. தோல்விக்குப் பிறகு பல துருக்கி வீரர்கள் கண்ணீருடன் திடலை விட்டுச் சென்றது கால்பந்து ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Turkiye knocked out of World Cup 2026 after 1-0 defeat to 10-man Paraguay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.