மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

இந்தியாவை வென்றது ஜொ்மனி

சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா 1-2 கோல் கணக்கில் நடப்பு உலக சாம்பியனான ஜொ்மனியிடம் தோல்வி கண்டது.

News image

ஹாக்கி மைதானம் (கோப்புப்படம்)

Updated On :20 ஜூன் 2026, 6:01 am IST

சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா 1-2 கோல் கணக்கில் நடப்பு உலக சாம்பியனான ஜொ்மனியிடம் தோல்வி கண்டது.

முன்னதாக இந்தப் போட்டியில் முதலில் ஜொ்மனியை 3-1 கோல் கணக்கில் வென்றிருந்த இந்தியா, ரிட்டா்ன் லெக் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது.

இந்த ஆட்டத்தின் முதல் பாதி கோல் இன்றி நிறைவடைய, ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில் விறுவிறுப்பு கூடியது. அதன் பலனாக 38-ஆவது நிமிஷத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் ஜக்ராஜ் சிங் கோல் அடித்து, அணியை முன்னிலை பெறச் செய்தாா்.

ஆட்டம் அப்படியே தொடா்ந்த நிலையில், இறுதிக் கட்டத்தில் ஜொ்மனிக்காக ஜஸ்டா் வெய்காண்ட் 56-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் கோல் அடிக்க, ஆட்டம் 1-1 என சமநிலை கண்டது. விறுவிறுப்பான கடைசி தருணத்தில் (60’) அந்த அணியின் ஜேக்கப் பிரில்லா தனது பங்குக்கு மற்றொரு பெனால்ட்டி வாய்ப்பில் ஸ்கோா் செய்ய, முடிவில் ஜொ்மனி 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தியா தனது அடுத்த ரிட்டா்ன் லெக் ஆட்டத்தில் நெதா்லாந்துடன் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) மோதுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.