தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

5 கோல்கள் அடித்து ஸ்வீடன் அசத்தல் வெற்றி!

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்வீடன் - துனிசியா இடையேயான போட்டியில் 5-1 என்ற கணக்கில் ஸ்வீடன் வென்றது.

News image

இரு கோல்கள் அடித்த யாசின் அயாரியைக் கொண்டாடிய ஸ்வீடன் வீரர்கள் - AP

Updated On :15 ஜூன் 2026, 8:05 pm IST

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்வீடன் - துனிசியா இடையேயான போட்டியில் 5-1 என்ற கணக்கில் ஸ்வீடன் வென்றது.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ‘எஃப்’ பிரிவில் உள்ள அணிகளான ஸ்வீடன் - துனிசியா இடையேயான போட்டி இன்று அதிகாலை நடைபெற்றது.

குவாடலூப்பில் நடந்த ஆட்டத்தில் யாசின் அயாரி 7-வது நிமிடத்தில் பெனால்டி பகுதிக்கு வெளியே இருந்து அடித்த மின்னல் வேக ஷாட் மூலம் தனது முதல் கோலை சுவீடன் பதிவு செய்தது.

ஆட்டம் தொடங்கிய அரை மணி நேரத்தில் அலெக்சாண்டர் இசாக் 2-வது கோலை அடித்து ஸ்வீடனை 2- 0 என்ற கணக்கில் முன்னிலைக்குக் கொண்டு வந்தார். லிவர்பூல் வீரரான அவர் சிறப்பாக முன்னேறி அந்த ஷாட்டை அடித்தார்.

துனிசியா அணியின் நம்பிக்கை தகர்ந்து கொண்டிருந்த நேரத்தில், அந்த அணியின் ஓமர் ரெகிக் தலையால் முட்டி ஒரு கோலை அடித்து 2-1 என்று துனிசியாவின் கோல் கணக்கைத் தொடங்கினார்.

ஆனால், அந்தத் தொடக்கத்தை உடனடியாக முடக்கும் விதமாக ஆட்டத்தின் பாதிக்கும் மேல் 59-வது நிமிடத்தில் ஸ்வீடன் வீரர் விக்டர் யோகரெஸ் ஒரு கோல் அடித்து 3-1 என்று முன்னிலையை உயர்த்தினார்.

பின்னர், இரு அணிகளுக்கும் கோல் அடிக்கும் வாய்ப்புகள் பலமுறை தவறின. ஆனால், ஸ்வீடன் வீரர் மத்தியாஸ் ஸ்வான்பெர்க் 84-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். பின்னர், முதல் கோலை அடித்த யாசின் அவாரி மீண்டும் ஒரு கோல் அடித்து ஸ்வீடனின் கோல் கணக்கை 5-1 என உயர்த்தினார்.

இதன் மூலம், ஸ்வீடன் அணி 5-1 என்ற கணக்கில் அசத்தலான ஆட்டத்தின் மூலம் துனிசியாவை தோற்கடித்தது.

Summary

Sweden defeated Tunisia 5–1 in the World Cup football match.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.