கால்பந்து உலகக் கோப்பையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த வீரர்களை தனது அணியில் இணைத்த ஆஸ்திரேலியா ”கால்பந்து அனைவருக்குமானது” எனக் கூறியிருந்தது.
உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே புலம்பெயர்ந்த கால்பந்து வீரர் நெஸ்டோரி இரங்குண்டா (20 வயது) ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தியுள்ளார்.
கனடாவில் நடைபெற்ற துருக்கி - ஆஸ்திரேலிய கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2-0 என அபார வெற்றியைப் பெற்றது.
இந்தப் போட்டியில் தொடக்கதிலேயே 27ஆவது நிமிஷத்தில் நெஸ்டோரி இரங்குண்டா சிறப்பான கோல் அடித்தார். குறைந்த வயதில் (20 ஆண்டுகள், 125 நாள்கள்) ஆஸ்திரேலிய அணிக்காக கோல் அடித்து சாதனை படைத்த இவருக்குத்தான் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான புருண்டியில் ஏற்பட்ட சிவில் போரினால் கிகோமா என்ற தான்சானியாவின் அகதிகள் முகாமில் பிறந்த இவர் குழந்தையாக இருக்கும்போதே ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார்.
அடிலெய்டு யுனைடெட் அணியில் டிஃபென்சர்களை வீழ்த்தி 16 கோல்கள் அடித்து அசத்தினார். லியோனல் மெஸ்ஸி பாணியில் விளையாடும் இவர் ஆஸி.யின் நட்சத்திர வீரராக புகழப்படுகிறார். பின்னர் ஜெர்மனியின் புகழ்பெற்ற பயர்ன் மியூனிக் அணிக்கு 2024ல் தேர்வானார்.
புலம்பெயர்ந்த வீரராக இருந்தாலும் இவரது திறமை மீது நம்பிக்கை வைத்த ஆஸ்திரேலியா அணி அவரை அணியில் இணைத்த நம்பிக்கை வீண்போகவில்லை என்பதை முதல் போட்டியிலேயே நிரூபித்துள்ளார்.
Your Superior Player of the Match is Nestory Irankunda.
— FIFA World Cup (@FIFAWorldCup) June 14, 2026
#FIFAWorldCup #SuperiorPOTM pic.twitter.com/rKGmG0ZFTm
Summary
Australia immigrant player Nestory Irankunda is won the Superior Player of the Match award
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோல்வியிலும் ஆட்ட நாயகன் விருது..! பராகுவே கோல்கீப்பருக்கு குவியும் வாழ்த்துகள்!

பல சாதனைகளுடன் ஆட்ட நாயகன் விருது வென்றார் மெஸ்ஸி!

உலக சாதனையுடன் ஆட்ட நாயகன் விருது..! மெஸ்ஸியின் பேட்டி!

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்கா!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan





