பிரான்ஸ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பராகுவே அணியின் கோல்கீப்பருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் பிரான்ஸ் 1-0 என வென்றாலும் ஆட்ட நாயகன் விருது தோல்வியடைந்த அணியின் வீரருக்கு வழங்கப்பட்டுள்ளது கால்பந்து ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பிலடெல்ஃபியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பராகுவே அணியை 1-0 என வீழ்த்திய பிரான்ஸ் காலிறுதிக்கு இரண்டாவது அணியாகத் தேர்வு பெற்றது.
இந்தப் போட்டியில் பிரான்ஸ் அடித்த 15 ஷாட்டுகளில் இலக்கை நோக்கி 5 முறை மட்டுமே அடிக்கப்பட்டது. அதில் ஒருமுறை (பெனால்டியில்) மட்டுமே கோல்கீப்பர் தவறினார்.
இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டுள்ளது. எம்பாபேவுக்கு வழங்காதது ஏன் என பிரான்ஸ் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் பேசி வருகிறார்கள்.
முன்னதாக, 2014 உலகக் கோப்பையில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அமெரிக்கா பெல்ஜியத்திடம் 1-2 எனத் தோல்வியுற்றது. அதில் 16 கோல்களைத் தடுத்து வரலாறு படைத்த டிம் ஹோவர்டுக்கும் ஆட்ட நாயகன் விருது வழங்கப்படிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Orlando Gill takes the honours as your @MichelobUltra Superior Player of the Match. ð
— FIFA World Cup (@FIFAWorldCup) July 4, 2026
#FIFAWorldCup #SuperiorPOTM pic.twitter.com/TdFB9RiTMw
Summary
Inspite of lose Paraguayan Goalkeeper Orlando Gill takes a man of the match against France
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தகுதியே இல்லாத இழிவான பெண்... பராகுவே செனட்டருக்கு எம்பாபே பதிலடி!

பல சாதனைகளுடன் ஆட்ட நாயகன் விருது வென்றார் மெஸ்ஸி!

உலக சாதனையுடன் ஆட்ட நாயகன் விருது..! மெஸ்ஸியின் பேட்டி!

வீண்போகாத ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை..! ஆட்ட நாயகன் விருது வென்ற புலம்பெயர்ந்த வீரர்!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan





