கால்பந்து உலகக் கோப்பையில் அமெரிக்கா தனது வரலாற்று வெற்றியை முதன்முதலாகப் பதிவு செய்துள்ளது. பராகுவே அணியுடன் மோதிய அமெரிக்கா 4-1 என வீழ்த்தியது.
நடப்பு உலகக் கோப்பை போட்டிகள் ஜூன் 11 முதல் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையில் முதல்முறையாக 48 அணிகள் பங்கேற்கின்றன.
லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் சோஃபி திடலில் அமெரிக்காவும் பராகுவே அணியும் மோதின. இதில் 7ஆவது நிமிஷத்திலேயே பராகுவே அணி ஓன் கோல் அடித்து அமெரிக்காவுக்கு உதவியது.
பின்னர், அமெரிக்காவின் ஃபோலரின் பலோகன் 31, 45_5ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார். இறுதியில் 90+8ஆவது நிமிஷத்தில் ரெய்னா கோல் அடித்தார். பராகுவே அணி சார்பில் மௌரிசியோ 73ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் அடித்தார்.
இந்தப் போட்டியில் மூன்று வரலாற்றுச் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் கால்பந்து உலகக் கோப்பையின் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு போட்டியில் நான்கு கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளது.
ஃபோலரின் பலோகன் 2 கோல்கள் அடித்த முதல் அமெரிக்க வீரராக மற்றுமொரு சாதனை படைத்துள்ளார்.
சொந்த மண்ணில் 32 ஆண்டுகளில் தனது முதல் உலகக் கோப்பை போட்டியில் வென்று அமெரிக்கா பல சாதனைகளை படைத்துள்ளது.
இந்தப் போட்டியைக் காண 70,492 பேர் குவிந்தார்கள். அமெரிக்காவின் புதிய பயிற்சியாளர் மௌரிசியோ பொச்செட்டினோ வருகையினால் அணிக்குள் புதிய உத்வேகத்தை பாய்ச்சியுள்ளார்.
Summary
US opens home World Cup with 4-1 victory over Paraguay, sparked by Balogun's 2 goals
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடைசி நேர பரபரப்பு... டிராவில் முடிந்த கனடா - போஸ்னியா ஆட்டம்!

96 ஆண்டுகால சாபத்தை முறியடித்து வரலாறு படைத்தது மெக்சிகோ!
உலகக் கோப்பையின் முதல் போட்டி: வெற்றியுடன் தொடங்கியது மெக்சிகோ!

891 புதிய வீரர்களுடன் முதல்முறையாக 1,248 பேர் பங்கேற்கும் கால்பந்து உலகக் கோப்பை!
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope




