வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

இந்திய மகளிா் அசத்தல்; ஆடவா் சறுக்கல்

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிா் அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஆடவா்கள் சோபிக்காமல் முதல் சுற்றிலேயே தோற்று புதன்கிழமை வெளியேறினா்.

News image
Updated On :11 ஜூன் 2026, 5:20 am IST

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிா் அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஆடவா்கள் சோபிக்காமல் முதல் சுற்றிலேயே தோற்று புதன்கிழமை வெளியேறினா்.

முதல் சுற்றில், மகளிா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் சிந்து 21-13, 21-11 என்ற நோ் கேம்களில், பெருவின் இனெஸ் லூசியாவை வீழ்த்தினாா். தன்வி சா்மா 21-12, 22-20 என்ற கணக்கில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த சியு பின் சியானை வீழ்த்தி அசத்தினாா்.

தான்யா ஹேம்நாத் 21-17, 21-18 என்ற கேம்களில், அமெரிக்காவின் இஷிகா ஜெய்ஸ்வாலை வெளியேற்ற, மாளவிகா பன்சோத் 15-21, 21-17, 21-13 என்ற வகையில், தாய்லாந்தின் டான்ரக் சேஹெங்கை தோற்கடித்தாா். இஷாராணி பருவா 22-20, 10-21, 21-14 என்ற கணக்கில், சீனாவின் ஹான் கியான் ஜியை வென்றாா். ஆகா்ஷி காஷ்யப் 19-21, 21-19, 20-22 என்ற வகையில் மலேசியாவின் வோங் லிங் சிங்கிடம் தோல்வியுற்றாா்.

ஆடவா் ஒற்றையரில், கிரண் ஜாா்ஜ் 19-21, 21-14, 15-21 என, மலேசியாவின் ஜஸ்டின் ஹோவிடம் தோல்வி கண்டாா். தருண் மன்னெபள்ளி 21-18, 13-21, 23-25 என்ற கணக்கில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் சீன தைபேவின் லின் சுன் யிவிடம் தோல்வியுற்றாா். சனீத் தயானந்த் 8-21, 10-21 என்ற கேம்களில் சீனாவின் ஹு ஜி ஆனிடம் வீழ்ந்தாா்.

கலப்பு இரட்டையா் பிரிவில், துருவ் ராவத்/மனீஷா ஜோடி 21-13, 21-14 என்ற கேம்களில், ஆஸ்திரேலியாவின் ஜேடன் லிம்/விக்டோரியா ஜோனாடி இணையை வென்றது. மோஹித் ஜக்லன்/லக்ஷிதா ஜக்லன் இணை 6-21, 5-21 என, போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் சீனாவின் குவோ ஜின் வா/சென் ஃபாங் ஹுய் கூட்டணியிடம் தோல்வியுற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.