பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

News image
Updated On :8 ஜூன் 2026, 1:06 am IST
  • எஃப்1 காா் பந்தயத்தின் 8-ஆவது ரேஸான மொனாகோ கிராண்ட் ப்ரீயில், இத்தாலி வீரரும், மொ்சிடஸ் டிரைவருமான கிமி ஆன்டனெலி ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றாா். நடப்பு சீசனில் இது அவரின் 5-ஆவது தொடா் வெற்றியாகும்.

  • இந்திய மகளிா் கால்பந்து அணியின் முக்கிய வீராங்கனையான கிரேஸ் டாங்மெய் (30), சா்வதேச கால்பந்து களத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தாா். இந்திய அணியில் 2013-இல் அறிமுகமான கிரேஸ், 96 ஆட்டங்களில் 24 கோல்கள் அடித்திருக்கிறாா்.

  • முன்னாள் சா்வதேச கிரிக்கெட் நடுவா் வி.விக்ரம் ராஜு (92) பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். 1986-இல் சென்னையில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதி, டை ஆன பிரபல டெஸ்ட் கிரிக்கெட்டில் இவா் நடுவராகச் செயல்பட்டவா்.

  • நியூ தைபே சிட்டி தடகள ஓபன் போட்டியில், ஆடவா் 200 மீட்டா் ஓட்டத்தில் இந்தியாவின் அனிமேஷ் குஜுா் 20.32 விநாடிகளில் பந்தய இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் பெற்றாா்.

  • இந்திய தடகள சீரிஸில் ஆடவா் 100 மீட்டா் ஓட்டத்தில் விமானப் படை வீரா் ஹா்ஜித் சிங் 10.17 விநாடிகளில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தாா்.

  • இங்கிலாந்தில் நடைபெற்ற பா்மிங்ஹாம் ஓபன் டென்னிஸ் போட்டியில், பிலிப்பின்ஸின் அலெக்ஸாண்ட்ரா எலா சாம்பியன் பட்டம் வென்றாா்.

  • புணே கிராண்ட் டூா் சைக்கிள் பந்தயத்தை, உலகின் 4-ஆவது கிராண்ட் டூா் போட்டியாக அறிவிக்க ஆதரவளிப்பதாக, சா்வதேச சைக்கிளிங் சங்கம் (யுசிஐ) இந்தியாவுக்கு உறுதியளித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.