யு 18 ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜப்பானை வீழ்த்தி இந்திய ஆடவா் அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது
பதினெட்டு வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டம் கவாசாகி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் ஹாக்கி திடலில் இன்று நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின.
இதில் 4-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஜப்பான் சார்பில் 52 நிமிடத்தில் நுமடா ககு மட்டுமே பெனால்டி கார்னர் மூலம் கோல் அடித்தார். இது இந்தியா வெல்லும் மூன்றாவது சாம்பியன் கோப்பையாகும்.
லீக் சுற்றில் இந்தியாவை வீழ்த்தியிருந்த ஜப்பான் அணி, இத்தொடரில் இதுவரை தோல்வியடையாமல் இருந்தது. முன்னதாக நடந்த அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தானையும், ஜப்பான் மலேசியாவையும் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.3 லட்ச வழங்கப்படும் என ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.
Summary
The Indian U-18 Men’s Hockey Team was crowned champion of the Men’s U-18 Asia Cup 2026 after defeating host Japan 4-1 in the final in Kakamigahara, Japan, on saturday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் சீனா, பாகிஸ்தானுடன் இந்திய அணிகள் மோதல்

யு-18 ஆசிய ஹாக்கி: இந்தியா அபார வெற்றி!
யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: தென் கொரியாவை வென்றது இந்தியா

யு-18 ஆசியக் கோப்பை மகளிா் ஹாக்கி: இந்தியா வெற்றி
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



