ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 10ஆவது பதக்கத்தை உறுதிசெய்த ஜாஸ்மின்!

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு குத்துச்சண்டையில் 10ஆவது பதக்கத்தை உறுதிசெய்த ஜாஸ்மின் குறித்து...

Jaismine Lamboria

ஜாஸ்மின் லாம்போரியா - படம்: எக்ஸ் / சாய் மீடியா

Published On :30 ஜூலை 2026, 11:29 am IST

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு குத்துச்சண்டையில் 10ஆவது பதக்கத்தை ஜாஸ்மின் (24 வயது) உறுதிசெய்துள்ளார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஜூலை 23ல் தொடங்கின. இதில் இந்தியாவிலிருந்து 78 வீரர்கள், 48 வீராங்கனைகள், 65 அலுவலர்கள் உள்பட மொத்தம் 191 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது.

நேற்றிரவு நடந்த 57 கிலோ எடைப் பிரிவுக்கான மகளிர் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் ஜாஸ்மின் லாம்போரியா இங்கிலாந்தின் எல்லீஸ் க்ளீன் உடன் மோதினார்.

இந்தப் போட்டியில் நான்கு நடுவர்களின் புள்ளிகள் ஜாஸ்மினுக்கு சாதகமாக இருந்ததால் 4-1 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஜாஸ்மினின் அரையிறுதிப் போட்டி ஜூலை 31ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7.15 மணிக்கு நடைபெற இருக்கிறது.

குத்துச் சண்டையில் மட்டுமே இந்தியாவுக்கு 10 பதக்கங்கள் உறுதிசெய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் 4 ஆடவர்கள், 6 பெண்கள் இருக்கிறார்கள். ஆடவர்களை விட மகளிர் அதிகளவில் பங்காற்றி இருப்பது கவனிக்கத்தக்கது.

Summary

Jaismine Lamboria confirm India's 10th medal in boxing at cwg 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.