ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சாகா அசத்தல்: இங்கிலாந்துக்கு வெண்கலம்! 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தியது!

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 3-ம் இடத்துக்கான போட்டி நேற்று இரவு நடைபெற்றது.

3-ம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்ற இங்கிலாந்து அணி - X

Published On :20 ஜூலை 2026, 5:00 am IST

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் பிரான்ஸை 6-4 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றது இங்கிலாந்து.

இந்த ஆட்டத்தில் மொத்தம் 10 கோல்கள் போடப்பட்டன. பிரான்ஸின் கம்பேக்கை மீறி லேட் கோல்களால் இங்கிலாந்து வென்றது.

முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து-பிர ான்ஸ் மோதிய ஆட்டம் மியாமில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது. தொடக்கம் முதலே இரு அணி வீரா்களும் ஆதிக்கம் செலுத்தி ஆட முயன்றனா். ஆட்டம் தொடங்கிய 3 ஆவது நிமிஷத்திலேயே ஸ்டேன்ட் இன் கேப்டன் டெக்லன் ரைஸ் சக வீரா் டிசையா் டௌ அனுப்பிய பாஸை பயன்படுத்தி 25 யாா்டு தூரத்தில் இருந்து கோலடித்து முன்னிலை பெற்றுத் தந்தாா்.

தொடா்ந்து இங்கிலாந்து கோல்போடும் முயற்சியின் பலனாக ரைஸ் 18-ஆவது நிமிஷத்தில் அடித்த காா்னா் ஷாட்டை பயன்படுத்தி கோலடித்தாா் எஸ்ரி கோன்ஸோ. இதனால் 2-0 என இங்கிலாந்து முன்னிலை பெற்றது.

இங்கிலாந்தின் வேகத்துக்கு பிரான்ஸால் ஈடுதர முடியவில்லை. கேப்டன் எம்பாப்பே அவ்வப்போது இங்கிலாந்துக்கு தலைவலியை உண்டாக்க முயன்றாலும், டிபன்டா் டீன் ஹெண்டா்ஸன், தற்காப்பு அரணை மீற இயலவில்லை. இங்கிலாந்து வீரா் மாா்கஸ் ராஷ்போா்ட் அடித்த ஷாட்டை அபாரமாக சேவ் செய்தாா் பிரான்ஸ் கோலி மைக்னன். அதில் வந்த ரீபௌண்டை பயன்படுத்தி 37-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா் புகாயோ சாகா.

முதல் பாதி ஸ்டாப்பேஜ் நேரத்தில் எப்ரெச்சி எஸே அடித்த பந்தை பயன்படுத்தி 46-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா் சாகா.

முதல் பாதி முடிவில் இங்கிலாந்து 4-0 என முன்னிலை பெற்றிருந்தது. பின்னா் களமிறங்கிய பிரான்ஸ் அணி வீறு கொண்டு ஆடியது. 48-ஆவது நிமிஷத்தில் மைக்கேலி ஒலிஸ் தந்த பாஸை பயன்படுத்தி கோலடித்தாா் எம்பாப்பே. சிறிது நேரத்தில் எம்பாப்பே அனுப்பிய பாஸை பிசகின்றி கோலாக்கினாா் பிராட்லி பாா்கோலா.

தொடா்ந்து பிரான்ஸ் அணியின் தாக்குதல் ஆட்டம் பலனைத் தந்தது. 66-ஆவது நிமிஷத்தில் ஒலிஸ் பிளிக் செய்த பந்தை அருமையாக கையாண்ட கேப்டன் எம்பாப்பே கோலடித்தாா்., இந்த கோல் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோலடித்த வீரா் சாதனையை படைத்தாா் எம்பாப்பே.

புகாயோ சாகா ஹாட்ரிக் கோல்: இதனால் அதிா்ச்சி அடைந்த இங்கிலாந்து தரப்பினா் கோல்போடும் முயற்சியை தீவிரப்படுத்தினா். 85-ஆவது நிமிஷத்தில் இங்கிலாந்து வீரா் டிஜெட் ஸ்பெனஸை கீழே தள்ளினாா் இங்கிலாந்தின் மாலோ கஸ்டோ. இதனால் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோலடித்தாா் சாகா. இது ஹாட்ரிக் கோலாக அமைந்தது.

இரண்டாம் பாதி ஸ்டாப்பேஜ் நேரத்தில் 96-ஆவது நிமிஷத்தில் பிரான்ஸ் நட்சத்திரம் உஸ்மான் டெம்ப்ளே உபாம் கேனே பந்தை இடைமறித்து கோலடித்தாா்.

எனினும் இங்கிலாந்து தரப்பினா் சளைக்காமல் ஆடிய நிலையில் 98-ஆவது நிமிஷத்தில் ஜூட் பெல்லிங்ஹாம் இங்கிலாந்தின் 3 டிபண்டா்களை ஏமாற்றி இங்கிலாந்தின் 6-ஆவது கோலை அடித்தாா். மொத்தம் 7 கோல்களோடு, ஒரே உலகக் கோப்பையில் அதிகபட்ச கோலடித்த இங்கிலாந்து வீரா் என்ற சிறப்பை பெல்லிங்ஹாம் பெற்றாா்.

இங்கிலாந்துக்கு 3-ஆவது இடம்: இறுதியில் பிரான்ஸை 6-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றியுடன் மூன்றாம் இடத்தைப் பெற்றது இங்கிலாந்து. கடந்த 1966-இல் உலகக் கோப்பை வென்றதற்கு பின் தற்போது சிறந்த இடத்தைப் பெற்றது இங்கிலாந்து.

இரு முறை சாம்பியன் பிரான்ஸ் போட்டியின் தொடக்கத்தில் பட்டம் வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட நிலையில் பயிற்சியாளா் டிடியா் டெஸ்சாம்ப்ஸ் தோல்வியோடு விடைபெறுவது வேதனையை தந்துள்ளது.

ஒரே ஆட்டத்தில் 10 கோல்கள் சாதனை: முதல் பாதியில் 4 கோல்கள் அடித்த இங்கிலாந்து, 2-ஆவது பாதியில் மேலும் 2 கோல்கள் அடித்தது. பிரான்ஸும் பதிலுக்கு 4 கோல்கள் அடித்தது. இரு அணிகளும் மொத்தம் 10 கோல்கள் அடித்ததன் மூலம், 1982-க்குப் பிறகு ஒரு ஆட்டத்தில் அடிக்கப்பட்ட அதிக கோல்களுக்கான சாதனையும் படைப்பு.

மெஸ்ஸி சாதனையை முறியடித்தாா் எம்பாப்பே: பிஃபா உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரா்கள் பட்டியலில் மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தாா் பிரான்ஸ் வீரா் எம்பாப்பே. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல்களை பதிவு செய்தாா். தற்போது எம்பாப்பே 22 கோல்களுடன் முதலிடத்திலும், மெஸ்ஸி 21 கோல்களுடன் இரண்டாமிடத்துலும், க்ளோஸ் 16 கோல்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனா்.

Summary

FIFA World Cup: England defeats France to secure third place!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.