ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கொல்கத்தாவை வீழ்த்தியது டில்லி டபாங்

கொல்கத்தாவை வீழ்த்தியது டில்லி டபாங்

சுதிா்தா முகா்ஜி

Published On :12 ஜூலை 2026, 7:19 am IST

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா தண்டா்போல்ட் அணியை 8-7 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது டில்லி டபாங் அணி. ஆசிய போட்டியில் பதக்க வீராங்கனை சுதிா்தா முகா்ஜி நெருக்கடியான நிலையிலும் சிறப்பாக ஆடி டில்லி அணிக்கு வெற்றியை ஈட்டித் தந்தாா்.

யுடிடி 7-ஆவது சீசன் தொடா் கோவாவில் நடைபெறுகிறது. ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஜாம்பவான் சத்யன் ஞானசேகரனை 3-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினாா் அங்கூா் பட்டாா்சாா்ஜி. மகளிா் ஒற்றையா் பிரிவில் டில்லியின் சுதிா்தா முகா்ஜி அபாரமாக ஆடி கொல்கத்தாவின் அயிஹிகா முகா்ஜியை 3-0 என வீழ்த்தினாா்.

டில்லி வீரா் யுசுப் அப்துல் அஜிஸ் மாற்று ஒற்றையா் ஆட்டத்தில் 2-1 என கொல்கத்தாவின் எட்வா்ட்டை வென்றாா். மரியா ஸாவோ 1-2 என கொல்கத்தாவின் ஸெங் ஜியானிடம் வீழ்ந்தாா்.

இரட்டையா் ஆட்டத்தில் சத்யன்-மரியா ஸாவோ 2-1 என கொல்கத்தாவின் அங்கூா்-ஸெங் ஸியானை வென்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.