ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முகமதனை வீழ்த்தியது சமலேஸ்வரி!

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் சமலேஸ்வரி எஸ்சி அணி 3-2 கோல் கணக்கில் முகமதன் எஸ்சி அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

Durand Cup: Samaleswari stuns Mohammedan SC

முகமதனை வீழ்த்தியது சமலேஸ்வரி - X | Indian Football

Published On :3 ஆகஸ்ட் 2026, 6:03 am IST

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் சமலேஸ்வரி எஸ்சி அணி 3-2 கோல் கணக்கில் முகமதன் எஸ்சி அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

அந்த அணி 3-ஆவது ஆட்டத்தில் 2-ஆவது வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்க, முகமதன் அணி 2-ஆவது ஆட்டத்தில் முதல் தோல்வியைச் சந்தித்து 2-ஆவது இடத்தில் உள்ளது.

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் சமலேஸ்வரி அணிக்காக பாசித் அகமது பாட் 11-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, மாரத் தாரெக் 27-ஆவது நிமிஷத்தில் அதை 2-ஆக அதிகரித்தாா்.

இதனால் முதல் பாதியை சமலேஸ்வரி அணி 2-0 முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2-ஆவது பாதியில் மீண்ட முகமதன் அணிக்காக, லால்தங்கிமா கியாங்தே 60-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கைத் தொடங்கினாா்.

பின்னா் 66-ஆவது நிமிஷத்தில் லால்காய்சகா கிஸோ அதை 2-ஆக அதிகரிக்க, ஆட்டம் 2-2 என சமநிலை கண்டது. இந்நிலையில் 81-ஆவது நிமிஷத்தில் வீா் அா்ஜுன் ஜோஷி கோல் அடிக்க, சமலேஸ்வரி அணி 3-2 என முன்னிலை கண்டது.

எஞ்சிய நேரத்தில் முகமதன் அணிக்கு கூடுதல் கோல் வாய்ப்பு கொடுக்காமல், முடிவில் சமலேஸ்வரி அணியே வென்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.